திருப்பதி - பாடல் !

Related image

திருப்பதி வாசா திருமலை நேசா உன்
திருமுகம் காணவே கோவிந்த கோசா
திருப்பதி வாசா திருமலை நேசா உன்
திருமுகம் காணவே கோவிந்த கோசா
மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும்
மனதாற உனை நினைத்த மறு கணமே 
மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த
விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும்
விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே
விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த
கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே
கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த
பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா 
பசியோடு பத்தும் பறந்தோட
ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா 
ஒரு போதும் உனை மறவா திருநாள் 
தினம் வேண்டும் கோவிந்தா
அருள் தேடும் என் விழிகளுக்கு 
உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு செப்டம்பர் - 2019

அதே பத்து விரல் அலங்கோலமாய் சிற்பியின் கைரேகை அதே அத்தி மரம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சி...