ஈழம் என்றொரு பூமி!

ஈழம் என்றொரு பூமி! அங்கே 
இருப்பது தமிழினம் பாதி !
அழிவது குருதியில் நீதி ! அதை 
நிறுத்திட யாருமில்லை சாமி !

உதிப்பது ஒருதிசை கிழக்கு எங்கள் 
உணர்வுக்கு இல்லையங்கு மதிப்பு !
மறைவது மறுதிசை மேற்கு பெண்ணின் 
மானத்தை பறிப்பதேஅவர் பொழப்பு !

மனிதா மனிதா மரணம் புதிதா 
இனிதா இனிதா ஈழம் விடியல் இனிதாய் !

குண்டு துளைத்த ஜடலத்தைக் கண்டு 
கொத்தி தின்னும் பறவையும் துடிக்கும் !
கண்ணில் வழிந்திட்ட கடலினைக் கண்டு 
காகித கப்பலும் மூழ்கிட மறுக்கும்

மனிதா மனிதா மரணம் புதிதா 
மறுபடி விடியும் ஈழம் புதிதாய் !

2 comments:

 1. அருமையான வரிகள் - அவை
  என் ஈழநாட்டின் நிலைகூறும்
  இனிய படைப்பாக

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...