கவிசூரியன் மின்னிதழ் ஏப்ரல் 2017

மோதிர விரல் 
மெல்லக் கடிக்கிறது 
வரதட்சணை கணக்கு !
காவலாளி வீட்டில் 
இனிக்கிறது 
அணில் கடித்த கொய்யா
சுருக்கு பையில் 
நிரம்பி வழியுது 
பாட்டியின் பாசம்
பூட்டிய கோவில்
மனம் திறந்து பேசினான்
பாதிக்கப்பட்ட பக்தன்
சமபந்தி போஜனம் 
ஒதுக்கிவைத்தனர் 
கறிவேப்பிலை !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு