பாவேந்தர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் விழா

Related image


கவியோடு பிறந்த தமிழமுதே -எங்கள் 
செவியோடு இனிக்கும் நின் புகழினிதே !
கனவோடு சிதைந்தோர் மனமதிலே -உன் 
கழைக்கூத்தியின் காதல்பேசும் நூலினிதே !
அமிழெது விஷமெதுவென ஏற்றப்பாட்டு -ஒன்றே 
இளைஞர் இலக்கியமென்று வாழ்தலினிதே !
கனமதில் காதல்கொள்ளும் மனங்களிலே -நல் 
இன்பக் கடலினில் மூழ்கிடும் தேனிதே !
தலைமையோடு புகழோங்கும் மலரினிலே -நாளும் 
தலைமலை கண்ட  தேவரினிதே !
திகழொடு தாழ்ந்தோர் மணந்தனிலே -எங்கும் 
தித்திக்கும் சுடர்முத்த நல் தீர்ப்பினிதே!
கற்கண்டு சுவைமனக்கும் காதல் நினைவினில் -நற் 
கருணை பேசும் கடல்மேற் குமிழினிதே !
கவிதொடுக்கும் கதராடைப் பாட்டுதனிலே -புரட்சி 
காப்பியம்பேசும் தமிழச்சின் கத்தினிதே !
மயிலமுது குயிலின் இருண்ட வீடுதனிலே - நல்கும் 
முல்லைக்காடு இசைக்கும் அழகின்சிரிப்பினிதே 
மானுடம் போற்று குறிஞ்சித்திட்டுதனிலே -புதுவை  
மக்கட்பேறு போற்றும் குடும்பவிளக்கினிதே !

கவிசூரியன் மின்னிதழ் ஏப்ரல் 2017

மோதிர விரல் 
மெல்லக் கடிக்கிறது 
வரதட்சணை கணக்கு !
காவலாளி வீட்டில் 
இனிக்கிறது 
அணில் கடித்த கொய்யா
சுருக்கு பையில் 
நிரம்பி வழியுது 
பாட்டியின் பாசம்
பூட்டிய கோவில்
மனம் திறந்து பேசினான்
பாதிக்கப்பட்ட பக்தன்
சமபந்தி போஜனம் 
ஒதுக்கிவைத்தனர் 
கறிவேப்பிலை !

புதுமை பழமை,

9 வருடத்திற்கு முன் பேசிய வார்த்தையை தூசி தட்டிப் பார்க்கும் மக்கள் மத்தியில் தெரிகிறது பகைமை 

இது பாகுபலிக்கா இல்லை பாக்கப் பிரிவினைக்கா என்ற ஐயம் தோன்றுகிறது 
ஆம் காவேரி தாண்ணீர் தர மறுக்கும் நேரத்தில் நம் தமிழர்கள் ஊட்டி அருகே ஒரு தடுப்பணை கட்டினால் போதும் தண்ணீர் கேட்டு காவேரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பதிவு நேற்று பார்த்தேன்  #யோசியுங்கள் ?
கடந்த 30நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கடன் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர ஒரு புதிய முயற்சி மல்யா கைது ஆனா செய்தி யோசியுங்கள் ? எப்படி எல்லாம் திதை திருப்புகிறார்கள் என்று 
விவசாயி கடனை 7000 இளைஞர்கள் ஆளுக்கு 100 ரூ வீதம் கொடுத்தால் கடனை எளிதில் அடைக்கலாம் என்ற பதிவும் கண்டேன்  சரி தான் ஒரு மாதத்திற்கு data card பயன்படுத்துபவர்கள் அதைRecharge செய்வதை  நிறுத்திவிட்டு அதை இந்த மாதிரி நல்ல விசயத்திற்கு பயன் படுத்தலாம் என்றால் 
ஆட்சி எதற்கு அரசு தான் எதற்கு ?
நாட்டில் நடக்கும் கொடுமைகளை களையாமல் நாற்காலியைப் பிடிக்க சின்னம் சின்னம்மா என்று கூவிக்கொண்டே செல்கிறார்கள் ஏன் 
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்  70 நாட்கள் மறைவாக வைக்கப்படட போது கூட நாட்டில் அமைதி இருந்தது இப்போது அந்த அமைதி எங்கே ?
ஒரே நாளில் பண முடக்கம் 
ஒரே நாளில் பதவி  ஏற்பு 
ஒரே நாளில் மறைமுக வாக்கெடுப்பு 
ஒரே நாளில் விலை மாற்றம் 
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் 
ஆனால் ஒரே ஒரு நிடம் யோசித்துப் பார்த்தால் போதும் அரசும் சரி மக்களும் சரி மாறிவிட முடியும் 
அந்த மாற்றத்தை ஏன் கொண்டு வர மறுக்கிறது நம் மத்திய அரசு 
மதுவை ஒழிப்போம் என்று குரல் கொடுத்து ஓட்டு வாங்கினோம் அதை மறந்து ஓட்டு போட்டவர்கள் வீட்டு பக்கமே மதுவைதிறக்க முயலுவது சரியா ?
சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது ஏன் ? மீத்தேன் வாயு எடுக்க தடை விதித்தோம் அதை வேறு வழியில் கொண்டு வர துடிக்கிறது நம் அரசு ஆம் எல்லா சீமை கருவேலம் மரங்களை அழித்துவிட்டால் #விறகு #கரிக்கு எங்கே போவோம் அப்போது எளிதில் மீத்தேன் வாயு வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவோம் ஆதனால் தேவையான இடத்தில் இருப்பதை அளித்துவிட்டு தேவை இல்லாத இடத்தில் இருப்பதை பாதுகாப்போம் இதுவும் நான் ஒரு பதிவில் படித்து அறிந்தது தான் 
ஆகவே  ஒரு பிரச்னையை சமாளிக்க புது புது பிரச்சனை கொண்டு வரும் அரசுக்கு லாபம் தான் என்ன ?
மக்கள் விழித்து விட்டார்கள் இனிமேலும் ஏமாற்ற முடியாது ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒரு நன்மை இருப்பதை கண்டுகொள்கிறார்கள் முடிவில் சாத்தியமே வெல்லும் என்பதை மறந்து விடாதீர்கள் மாற்றம் கொண்டு வாருங்கள் 

ஆகவே மக்களின் நலன் கருதி அரசும் சரி ஆட்சியும் சரி நல்ல முடிவை எடுக்க வேண்டும் 

முத்தம் கேட்டு !

இதுவரை கண்ட கண்ட 
அழகு சாதனப் பொருட்கள் 
மட்டுமே அலங்கரித்த முகம் 
காத்திருக்கிறது 
உன் ஆசை முத்தம் கேட்டு !

கொலுசு மின்னிதழ் ஏப்ரல் 2017

அடிச்சி துவைக்கிறது
அடை மழை காய்கிறது
சலவை தொழிலாளியின் வயிறு ...!
ஒரு நாள் உழைப்பு
அதிக மகசூல்
பிச்சைப் பாத்திரம் ...!

ஈழம் என்றொரு பூமி!

ஈழம் என்றொரு பூமி! அங்கே 
இருப்பது தமிழினம் பாதி !
அழிவது குருதியில் நீதி ! அதை 
நிறுத்திட யாருமில்லை சாமி !

உதிப்பது ஒருதிசை கிழக்கு எங்கள் 
உணர்வுக்கு இல்லையங்கு மதிப்பு !
மறைவது மறுதிசை மேற்கு பெண்ணின் 
மானத்தை பறிப்பதேஅவர் பொழப்பு !

மனிதா மனிதா மரணம் புதிதா 
இனிதா இனிதா ஈழம் விடியல் இனிதாய் !

குண்டு துளைத்த ஜடலத்தைக் கண்டு 
கொத்தி தின்னும் பறவையும் துடிக்கும் !
கண்ணில் வழிந்திட்ட கடலினைக் கண்டு 
காகித கப்பலும் மூழ்கிட மறுக்கும்

மனிதா மனிதா மரணம் புதிதா 
மறுபடி விடியும் ஈழம் புதிதாய் !

உன் ஞாபகம்

நீ
என்னை 
அரளிப்பூவாய்
வெறுத்தாலும் 
ஆயுசுக்கும்
அழியாமல் 
பூஜிக்கிறது
உன் ஞாபகம்

விவசாயம் காப்போம் !


700x350 farmers

விவசாயம் என்ன ?இது சாயம் போகுமா ? போகாது ஞாயமா பாத்தா விலைக்கு வென போகும் !  சயமெல்லாம் போகாது ...

ஆம் ஏழைகளை வளர விடாமல் இன்று வரையிலும் சாயம் போய் கொண்டிருக்கிறது அரசாங்கம் ,

எந்த தொழில் செய்தலும் வரி ,உரிமை, காப்பீடு என்று இழப்பை சரி செய்துகொள்ள முடியும் அனால் விவசாயத்தில் அவ்வாறு சாத்தியம் இல்லை ஏன் என்றால் இது இயற்கை சம்மந்தப்பட்டது

அதனால் தான் லாபமோ நஷ்டமோ விதைத்தவனையே சாரும் இதனால் தான் அவனால் அந்த இழப்பில் இருந்து மீள முடியாமல் இன்று அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடடான்

ஒரு வேளை கார்ப்ரேட் காரர்களுக்கு நம் விவசாய பூமியை கொடுத்து விட்டு அவன் சொன்ன ரேட் க்கு அரசி பருப்பு இப்படி வாங்கிக்கொண்டே இருந்தால் சுமார் 5 வருடத்தில் அவன் தான் கோடிஸ்வரன் .

ஆனால் காலம் காலமாக விவசாயம் செய்யும் ஏழைக்கு கடன் தான் "தெருக்கோடி "

இந்த நிலை மாற வேண்டும் என்றால் விவசாயத்தை காப்போம் !

எப்படி நீங்கள் தான் சொல்ல வேண்டும் ?

முதல இருந்து ஆரம்பிப்போம் 
அப்படியே நல்ல படியா விவசாயம் முடிஞ்சி ஒரு % மேல இருந்த அவங்க கடன் தொடரும் ! ஒரு % கீழ இருந்த கடனை தள்ளுபடி செய்யும், வாவ் பின்ன என்ன நாம எல்லோரும் நல்ல சோறு சாப்பிடலாம் !

விதை வாங்குறத்தில் இருந்து அறுவடை காலம் வரை card மூலமே எல்லா செலவையும் கணக்கு பார்த்து கடனை அடைச்சு மிச்ச மீதி எவ்வளவு என்று பார்த்தால் தெரியும் விவசாயின் பொறுமை !

இப்ப மோடியே யோசிப்பாரு தப்பு கணக்கு போட்டுட்டமோனு ?

mhishavideo - 145