கடன் வாங்கி கழித்தலா ?

வாழ்ந்து விட்டு போவதற்கும் 
வீழ்ந்து வந்து வாழ்வதற்கும் 
காதல் என்ன 
கடன் வாங்கி கழித்தலா ?

நினைவுகள்

என்னோடு சுற்றியிருந்த
நினைவுகள் எல்லாம் 
உன்னோடு சுற்றுகிறதா என்று 
உணராமலே உயிர் வாழ்கிறேன் 
உலகம் உருண்டை என்பதை மறந்து !

ஆசையும் கனவும் !

எனக்கான 
தேடலின் காலம் 
முடிந்தது என்றாலும் 
என் ஆயுள் காலம் வரை 
அவகாசம் கொடுக்க மறுக்கிறது 
உன் மீதான 
ஆசையும் கனவும் !

ஜல்லிக்கட்டு 

செத்து விட்டார் CM 
கொத்து கொத்தாய் சொத்து சேர்க்க 
கட்டு காட்டாய் பணமாற்றம் 
காணாமல் போனது நீதி மாற்றம்

சுட்டு வைத்த சொத்தெல்லாம் 
சுடுகாடு வரை செல்லாது என தெரிந்தும் 
தெரு கூத்தாய் நாறும் சட்ட சபை

அட்டை போல ஒட்டிக்கொண்ட 
ஆட்சி காலம் வெள்ளை சட்டை போட்ட
நரிகளிடம் மாட்டிக் கொண்டதே

திட்டம் போட்டு சட்டம் படிக்கும் 
திருடர்கள் எல்லாம் வட்டம் போட்டு 
வாழ்வதை நிறுத்த

ஒட்டுப் போட்ட மக்கள் கூட்டமே 
ஒட்டுமொத்த வாக்குகளையும் 
கட்டி காத்த ஜல்லிக்கட்டு 
காளையர்களுக்கு சமர்ப்பியுங்கள் !

என் கண்ணை !

கரை தைக்கும் நுரையை 
களவாடி உடுத்திக் கொண்டு 
என் 
கண்ணை கடலாக்கிவிட்டு 
கண்ணுக்குள் இருந்து 
காத்திக் கப்பலாட்டம் 
குத்திக் கிழிக்கிறாள் மனதை

உலக தமிழ் மொழி தினம்

வாய் மொழியில் பிறந்த தாய் மொழியே 
தமிழ் மொழியே தா மொழியே தந்தை தாவும் வாழ்வழியே 
கோ மொழியே கோயில் பேசும் நான் மொழியே 
நன்நூல் தரித்த வான் மொழியே இவ்வையகம் போற்றும் 
தேன் மொழியே நிம் உலகமதில் உயிர் வாழ வாழ்மொழியே 
வணங்குகிறேன் கவி வழியே வாழ்த்துங்கள் செம்மொழியே!

                                                                                                                       -21.2.2017

முதியோர்சிறை !

ஊழல் செய்வோரெல்லாம் உல்லாசமாய் வாழ்ந்தொழிய 
ஊழலுக்கே உள்ளதோ முதியோர்சிறை !
பாலோடு வெண்ணையும் பகட்டுமேனி புண்சிரிப்பும் 
மண்ணோடு போகும்வரை மறையாதோ !
நன்னீர் கொண்டகாசியெல்லாம் நாற்றம் வீசுகையிலே 
புண்ணியபூமிதனில் பிறப்பிற்கோ அர்த்தமேதோ !

சென்ரியு


வரதட்சணை  
செலவு கணக்கு காட்டினான் 
தாய் மாமன் 
ஆண்டு வருமானம் 
புரட்டிப்போடுகிறது 
பெண் கல்வி 
அதிகமாக நேசித்துவிட்டேன் 
இந்த காதலர் தினமும் 
ஏமாற்றத்துடன் முதிர் கன்னி !
கடவுளின் மனம் 
எதிரொலிக்கிறது 
நேத்திக்கடன்!
கண் திறந்தார் கடவுள் 
பார்வை கிடைத்தது 
யாசகனுக்கு !

காதலர்தினத்தில் !

இதுவரை 
அடைகாத்து வைத்த 
நம் காதலை 
வறுத்து எடுத்துவிடு 
வரும் காதலர்தினத்தில்

நம் காதல் !என் 
மரணத்தின் சாயலில் 
அவள் 
உயிர்பெற துடிக்கிறது 
நம் காதல் !

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...