
| அலுப்பை போக்கும் |
| அதிகாலை |
| ஆண்டவன் அருளோடு |
| அவளின் பயணம்…. |
| இறங்க மனமில்லை |
| இறங்கியது கால்கள் |
| சேலை வேட்டியானது |
| செஞ்சிலுவை சட்டை போட்டு |
| க ஞ்சிக் கலையம் தன் கண்மறைக்க |
| கடகடவென்று |
| கடல்நீரைத் தளங்களில் பாய்ச்சிக் |
| கதிரவன் துணைகொண்டு |
| மடமடவெனக் |
| கோடுபோட்ட வரப்பில் |
| மஞ்சள் வெயில் மணத்தோடு |
| தகதகவென மின்னும் உப்பளத்தில் |
| தாகம் மறந்து |
| தேகம் மெலிந்து |
| சோகம் குவியும் |
| சொப்பன வாழ்க்கையில் |
| உடலோடு உழற்றும் |
| உப்புக் காற்றில் |
| கருவாடெனக் காய்ந்து |
| திருவோடு அறியாத |
| பிள்ளைக்காக |
| தினம் தினம் வெந்து தணியும் |
| வேள்வியில் |
| உலகமே ருசித்திருக்க |
| உள்ளம் உருகுதே எங்கள் |
| உயிரும் கருகுதே |
| எள்ளும் தண்ணியும் |
| இறைப்பதற்குள் |
| இறைவா |
| எங்களை மீட்டெடுக்க வாராயோ |
| இல்லை மாற்று வழி தாராயோ! |
சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள்
Delete