![]() | |
| கடுகு பொரித்த சத்தம் கேட்டு | |
| கதிரவன் தன் கண் விழிக்க | |
| நாளை பொழுதும் நன்மை வேண்டி | |
| நாலு பேருக்கு உணவு அளிக்க | |
| கூனி குனிந்து கும்பிடு போட்ட காலத்திலும் | |
| கொடுத்த வாக்கு மாறாத நாக்கு | |
| சுத்தமான பாட்டியின் ஞாபகம் ! | |
கலப்பை
பிடித்த சத்தம் கேட்டு
|
|
| கம்பங்கூழும் தன் கண் மறைக்க | |
| கோமணப் பொழுதுடன் கொண்டவளை வந்ததடைந்து | |
| வாமன ராமனை வணங்கிய வாங்கிய | |
| கடனையெல்லாம் வாக்கு தவறாமல் | |
| கொடுத்தப்பின் சோற்றில் கைவைக்கும் | |
| தாத்தாவின் ஞாபகம் ! | |
மதிமுகம் பூப்படைந்த சத்தம் கேட்டு |
|
| மச்சான் தன கண் மெய்சிலிர்க்க | |
| குச்சில் கட்டும் தாய்மாமன் தான் | |
| மாதவி மகளானாலும் மாலையும் கழுத்துடன் | |
| மங்காத சீர்வரிசையில் மஞ்சள் தாலிக்கு | |
| என் மகனே சொந்தமென்று வாக்கு கொடுத்த | |
| தாய் மாமனின் ஞாபகம் ! | |
வெட்டு குத்து சத்தம் கேட்டு |
|
| வெறி பிடித்த ஜாதி கூட்டம் | |
| பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் | |
| வாழ்ந்த காலம் தனை மறந்து | |
| உள்ளம் ஒன்றென கலந்துதவும் | |
| ஊரார் மத்தியில் மத்தாப்பு வெடி முழங்க | |
| மாசி மகம் திருவிழாவில் மடிந்து வணங்கும் | |
தெய்வவாக்கு ஞாபகம் !
|
வாக்கு மாறாத நாக்கு ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...

சிறந்த படைப்பு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete