விடியலின் கொடுமை !ஒளிந்து விளையாடும் 
கனவுக்கு 
தெரியாது 
விடியலின் கொடுமை !

தனக்குத் தானே 
பேசி மகிழும் 
கற்பனைக்கு 
தெரியாது 
காகிதத்தின் வலிமை !

இரவு பகல் பாரது 
இதயம் ஏங்கும் 
அழிவுக்கு  
தெரியாது 
கல்லறையின் பெருமை !

நினைவுகளை சுமந்து 
கனவுகளில் பறந்து 
இதயத்தில் அமரும் 
காதலுக்கு 
தெரியாது 
கண்ணீரின் இனிமை !

தெரிந்தும் தெரியாமல் 
அறிந்தும் அறியாமல் 
அங்கிங்கும் வாடும் 
உறவுக்கு 
தெரியாது 
காலத்தின் கடமை !

2 comments:

 1. வணக்கம்
  காதல் கவிதை ஒரு சுகந்தான்... அற்புதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நிச்சியம் வருகிறேன் தாங்கள் பாராட்டுக்கு நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்