கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -24

air-pollution-causeway-bay

பாயும் வாகனத்தில் 

தூயக்காற்றும் துயரப்படுகிறது 

கண்ணுற்ற மனிதனால் ...!

விதியை மதியால் வெல்ல ...!விசித்திர உலகில் 
விதவிதமான முகங்கள் 
வியப்பில் 
வந்துகொண்டிருக்கிறான் 
எமதர்மன் 
எழுந்து நில்லுங்கள் 
விதியை மதியால் வெல்ல ...!

மனம் ...!

மனமே ...
மாதம் தரித்த முதல் 
மண்ணுடன் மறையும் வரை 
அழித்து அழித்து எழுதும் 
பேனாவில் 
நீ 
மட்டும் எப்படி 
அழியாமலே இருக்கின்றாய் ...!

முதிர் கன்னன் ...!

பன்னீரில் பருவமாகும் பூக்கள் 
விதைக்காக 
வெயிலில் முதிர்வடைவது போல் 
என்னில் பருவமான  காதல் 
விதைக்கப்படாமலே 
தோல்வியில் முதிர்வடைகிறது ...!

கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -23


வாத்தியார் பையன் மக்கு 

எதிர் சொல்லானது 

ஆசிரியர் தினம் ..!


முண்டாசு கவிஞன்

நினைவு நாள் 

அவிழவில்லை ஜாதிவெறி ...!

அருவி இதழ் எண் - 21

வறுமையின் நிறம் சிவப்பு 
உணர்த்தியது 
கீழ்வானம் ...!
சாலையற்ற சோலை
அணிவக்கும் 
எறும்புகள் ...!
பூ ஒன்று 
புன்னகை பலவிதம் 
வாழ்க்கை தோட்டம்.. !

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...