ஹிஷாலியின் ஹைக்கூ

விரல் பிடிக்க ஆசை 
விழி பிழம்பில் 
நிலா 
வரைந்து விட்டு 
செல்கிறாள் 
வானவில்லாட்டம் ...!
உலக இசை தினம் 
கண்ணீர் அஞ்சலியில் 
கானா …!
மாராப்பிற்குள் இசை 
மயங்கி உறங்கியது 
குழந்தை ...!
கல்லை கடவுளாக்கி
கருவறையை 
கல்லாக்கிவிட்டான் ...!
விளை நிலத்தில் 
ஓர் கவிதை 
முதிர்கன்னி ...!
காலம் கடத்தியது காற்று 
தண்டனைக்குள்ளானது 
கடிகாரம் ...!
வியர்வை கலந்த மழை 
இனித்தது 
சிறுதுளி பெருவெள்ளம் 

8 comments:

 1. அருமையான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. சிறந்த கவித்துளிகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 4. அருமை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்