பாக்யா வார இதழ் - ஜூன் 20-26 - 2014

உலர்ந்த கண்களோடு
மலர்ந்த பூக்களை விற்கிறேன் 
வறண்ட நாவிற்கு
ஒரு பிடி அரிசி கிடைக்காதா என்று
அறுந்த செருப்போடு
அறுந்து வரும் செருப்புகளைத்தைக்கிறேன்
இருண்ட குடிசைக்கு
ஒரு வாசல் கிடைக்காதா என்று
கிழிந்த புடவையும் 
மலிந்த முகமுமாய் 
வாகனத்தைத் தேடுகிறேன்
தகனம் செய்யும் தருணத்தில் வாய்க்கரிசிக்கு
ஒரு வழி கிடைக்காதா என்று
ஏதும் படிக்கவில்லை
அடையாளம் காட்டுகிறேன்
பழகிய தெருக்களில்
ஒரு வேளை பழைய சோறு கிடைக்காதா என்று
ஊனத்துடன் உழைப்பைக் 
கூட்டுகிறேன்
சலிப்பின் வியர்வை
ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று 
ஒண்டக் குடிசையில்லை
ஒய்யாரக் கூடத்தில்
கலவை சுமக்கிறேன்
பண்ட பாத்திரங்கள் எல்லாம்
ஒரு பாட்டில் மதுவிற்குள் மூழ்கிவிடக்கூடதென்று..!

12 comments:

  1. அருமை! பாக்யா இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் பல

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  4. நன்று.... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  5. நல்ல சிந்தனைகள் வெளிப்பட்டு வருகின்றன... பாராட்டுகள் தோழி...

    தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல

      Delete
  6. "ஊனத்துடன் உழைப்பைக்
    கூட்டுகிறேன்
    சலிப்பின் வியர்வை
    ஒரு நாள் பிழைப்பை
    கெடுத்துவிடக் கூடாதென்று" என்ற
    அடிகள் சிறந்து விளங்குகின்றன!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145