சிலையின் அழுகுரல் ...!

உலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு


சிலையாகி விட்டோம் 
விலை போகும்  நாட்டில் யாரும்
சிலையாகவில்லை 
வழிக்கொரு சிலையென  
வரலாற்றில் மட்டும் பேசப்படுகிறது யாரும் 
வழியாகவில்லை 
நிற்கும் சிலையை பார்த்து 
உட்காரவில்லை 
மனித காக்கைகள் 
ஆயிரம் வருடங்கள் 
முன் நோக்கி சென்றாலும் யாரும் 
அணிவகுக்கவில்லை 
பாடப்புத்தகத்தில் படித்துவிட்டோம் 
சாலை புத்தகத்தில் கடந்துவிட்டோம் 
ஓலை கிழியும் நேரத்தில் கூட 
ஒருவரும் ஆகவில்லை 
இன்னொரு தேச தலைவர்கள் போல் 
ஔவை பாடல் 
அறிவியல் தேடல் 
கம்பன் கூடல் 
கண்ணகி சிலம்பு என்றெல்லாம்  
சொல்லிக்கொண்டே போகிறோம் 
பள்ளிக்கூடத்தில் மட்டும் 
சிலையனவர்கள் மீண்டும் 
பிறந்தால் - மீண்டும் 
அடிமை படுவோம் 
அகிம்சை வளர்ப்போம் 
சுதந்திரம் பெறுவோம் 
தமிழனுக்குள்ளே தமிழனை மட்டும் .

10 comments:

  1. சிலையின் அழுகுரல் வேதனை தருகிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா

      Delete
  2. பெரியோருக்குச் சிலை வைத்தும் - அந்த
    பெரியோரைப் பற்றிய அறிவை
    நம் பிள்ளைகளுக்கு ஊட்டாமையால்
    சிலை அழுகிறதோ!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா

      Delete
  3. சிலையின் குரல் சிந்திக்க வைக்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் சிந்தனை கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அக்கா

      Delete
  4. நல்ல சிந்தனை

    ReplyDelete
  5. சிந்தனை நன்று..

    சிலைகள்
    சிந்தும் வரலாற்றுக் கண்ணீரை
    பார்போரும் இல்லை
    பார்த்தாலும் துடைப்போரில்லை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145