சிலையின் அழுகுரல் ...!

உலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு


சிலையாகி விட்டோம் 
விலை போகும்  நாட்டில் யாரும்
சிலையாகவில்லை 
வழிக்கொரு சிலையென  
வரலாற்றில் மட்டும் பேசப்படுகிறது யாரும் 
வழியாகவில்லை 
நிற்கும் சிலையை பார்த்து 
உட்காரவில்லை 
மனித காக்கைகள் 
ஆயிரம் வருடங்கள் 
முன் நோக்கி சென்றாலும் யாரும் 
அணிவகுக்கவில்லை 
பாடப்புத்தகத்தில் படித்துவிட்டோம் 
சாலை புத்தகத்தில் கடந்துவிட்டோம் 
ஓலை கிழியும் நேரத்தில் கூட 
ஒருவரும் ஆகவில்லை 
இன்னொரு தேச தலைவர்கள் போல் 
ஔவை பாடல் 
அறிவியல் தேடல் 
கம்பன் கூடல் 
கண்ணகி சிலம்பு என்றெல்லாம்  
சொல்லிக்கொண்டே போகிறோம் 
பள்ளிக்கூடத்தில் மட்டும் 
சிலையனவர்கள் மீண்டும் 
பிறந்தால் - மீண்டும் 
அடிமை படுவோம் 
அகிம்சை வளர்ப்போம் 
சுதந்திரம் பெறுவோம் 
தமிழனுக்குள்ளே தமிழனை மட்டும் .

பாடும் பணம் ...!

ஓடும் நாளை 

ஒரசும் சூரியன் 

நாடும் மாறி 

நான்மைபயக்குமெனில் 

சாடும் மக்களெல்லாம் 

சமமெனக் கருதிட 

பாடும் பணம் மட்டும் 

பாரில் பைதியமாக்குவது ஏன் ?

கண்ணீர் இனித்தால்



கண்ணீர் இனித்தால்
மண் நீருக்கு இல்லை 
மானிடம் மென்று சொன்னீர் இன்று 
தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் 
தலைமுறையும் கெட்டுவிடும் மென்று 
சொல்கிறது கலிகாலம் ...!
எண்ணீர் புஞ்சையில் பாயிந்தாலும் 
கண்ணீர் இல்லா விளைச்சலைக்  
கண்டு வந்த காலாம் போய் 
பண்ணீர் கொண்டு பாயிச்சினாலும் 
பஞ்சம் பஞ்சமே என்று 
பாட்டுப்பாடப்போகிறது பஞ்சாங்கம்
இனி கஞ்சும் நஞ்சாகும் 
கற்பமும் பிஞ்சாகும் 
கொஞ்சும் மொழிகள் மட்டும் உடலாகும் 
உலகில் உயிர்கள் இன்றி 
மரமாகும் எங்கும் மயானமாகும் முன் 
விழித்துக்கொள் ...!

கொத்தியது நாகமென்று ...

சாலையைச் சுத்தம் 
செய்யும் பெண் 
சலவை செய்யாத புடவை 
சலனப்படாத அரைகுறை தேகம் 
சறுக்கிய நொடியில் 
சரிந்த  உயிர் 
குப்பையுடன் குப்பையாய் சொல்கிறது 
குறித்த பின் தெறிந்தது 
கொத்தியது நாகமென்று ...!

என் காதலும் தொலைந்தது ...!




என்ன பந்தமோ 

புரியாமலே 

பொலபொலவென 

கண்ணீர் முத்துகள் 

கோர்க்கும் முன் 

தொலைவது போல் 

என் காதலும் தொலைந்தது ...!

மோடிக்கு வாழ்த்துக்கள் ..!



நாடித் துடிப்பில்


வென்ற மோடிக்கு


வாழ்த்துக்கள் ..!

ஜாதி மரத்தில் ...!

நூலாம்படையில் 
தொங்கும் புழுப்போல் 
என் காதலும் 
தொங்கி வழுக்குகிறது 
ஜாதி மரத்தில் ...!

mhishavideo - 145