ஹிஷாலியின் ஹைக்கூக்கள் ...!கற்பில்லை உனக்கு 
கதறுகிறது 
குழந்தை 

வெட்ட வெட்ட 
தளிரும் பயிர்கள் 
பெண்னின் வன்கொடுமை 

தாய் பாலில் கலப்படமோ 
கலங்கம் சுமக்கிறாள் 
பாரத தாய் 

அகிம்சை தான் 
சத்தியத்தின் 
கடவுள் 

காதல் 
கழுத்தின் 
அணிகலன் 

மறைந்த நினைவுகள்
உயிர் பெற்றது 
கவிதையில் 

அழும் குழந்தைக்கு 
ஆலகால விசத்தைப் 
புகுட்டினாள் அம்மா ..!

திறந்த வீட்டிற்குள் 
பரந்த உலகம் 
எமனை விரட்டியபடி !

ஒவ்வொரு மணித்துளியிலும் 
ஒளிந்திருக்கிறது 
பிறப்பின் மரணம் 

என்றுமே 
இனிப்பதில்லை 
கண்ணீர் பசி 

இயலாமை கூட்டத்தில் 
முயலாமை 
கதை ...!

சாலையில் பிணம் 
வணங்கியபடியே 
போலீஸ் வாகனம் ...!

இறந்த காலம் எதிர்காலம் 
கூட்டுப்பலன் 
புத்தாண்டு 

நாள்காட்டிக்கு பிறந்த நாள் 
இனிப்பு 
புன்னகை ...!

குடிகார அண்ணா
தேடினான் 
தங்கமான மாப்பிள்ளையை 

உயிருக்கு 
உத்திரவாதமில்லை 
உல்லாச விடுதியில் 

படிப்பறிவில்லை 
பட்டம் பெற்றோம் 
ஒன்பது 

கூண்டுக்கிளி 
சுதந்திரம் 
பொய்கள் ...!

அலையை 
பிடித்திக்கொண்டே 
படகின் பயணம் 

உடைகிறது பூமி
எழுந்தது 
பஞ்சம் 

உலகத்திரை 
கிழிந்தது 
நாகரீகத்தால் ...!

கோபுர தரிசனம் 
கொடுப்பனை இல்லா 
பிச்சைக்காரன் ...!

சிலையானாள் விலை மாது 
உயிர் பெற்றது 
பணம் ...!

அரை இரவு 
ஆவலுடன் காத்திருக்கும் 
கனவு 

இச்சை வயதில் 
கொச்சைப் பழக்கம் 
புகை மது மாது ...!

கை ஏந்துபவன் முன் 
தலை குனிந்தது 
நாணயம் ...!

3 comments:

 1. ஒளிந்திருக்கிறது, முயலாமை கதை உட்பட அனைத்தும் அருமை...

  வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 2. கனமான கவிதைகள்..

  ReplyDelete
 3. "இச்சை வயதில்
  கொச்சைப் பழக்கம்
  புகை, மது, மாது...!" என
  அழகாகச் சொல்லிய
  சிறந்த கவிதை!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...