காதலர் தினம் ...!

அழகை 
அடுத்தவர் பார்க்க 
ஆதரிப்பவன் கயவன் 

அழகை 
அவன் மாட்டும் பார்க்க 
ஆதரிப்பவன் காதலன் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!

ஏழிசை கீதமும்
எழுந்து நிற்கிறது
தாய்மைக்கும் முன்...!

பூர்வ ஜென்ம பாவமோ
கொன்று குவிக்கிறது
தங்கம் !

எதோ ஓர் ஆசையில்
எழுந்து நிற்கிறது
காளான் !

கண்ணிற்கு புலப்பாடத காற்று
மண்ணிற்கு உணர்த்தியது
மகுடம் நிரந்திரமில்லை !

மின்சார சுடுகாட்டால்
சமயலறையாகிக் கொண்டிருக்கிறது
சமாதி நிலங்கள்

எங்கோ ஓர் மூலையில்
முடங்கிக்கிடப்பேன்
முதியோர்  இல்லம் இல்லாவிடில்

கடிகாரத்திற்கு போட்டியாக
கொக்கரக்கோ சேவல்
யாரும்  தாழ்ந்தவரில்லை

கனவை புதைத்தது
நினைவு மண்டபம்
பதவி ஆசையில்

ஆமைகள் நகர்வலம்
மகிழ்ச்சியில்(வரவேற்ப்புடன் )
எமதர்ம ராஜா

ஆழ்ந்த உறக்கத்தில்
நடத்துனர்
விழித்துகொண்டது விதி

வெற்றியை புதைத்து
தோல்வியை  தழுவுங்கள்
கஜினி முகமது

கண்ணீர் சுவையை
உணர்த்தியது
மீன்கள்

எதோ ஓர் மரக்கிளையில்
என் தாய்
தளிர்கள்

வான் தேவதைக்கு
வாழ்த்து மடல்
மலர்கள்

சிறுமைக்கும் பொறுமைக்கும்
பாடம் கற்பித்தது
எறும்புகள்

சைக்கிள் பயணம் முடிந்தது
தொடர்ந்ததோ
சைக்ளோன் ஓட்டை

வானம் பாலுட்டியது
மண் பிள்ளைக்கு
சூரியன் ஆசியால்

எத்தனையோ கனவுகள்
எரிக்கப்பட்டுக்கிடக்கிறது
ஓலை  குடிசையில்

திணிக்கப்பட்ட ஆசைகள்
தணிக்கை செய்யப்படுகிறது
நாளேட்டில்

கால்கள் அற்று
கரை சேருகின்றன
சிற்பிகள்

நிலையில்லாத வாழ்க்கை
நிலைக்கப்படும்
இறப்பின் தானம்

மரித்தபின்பு
உயிர்த் தெளுகிறாள்
நீதி தேவதை

தத்தளிக்கும் எறும்பிற்கு
தன்னடக்கத்தை கற்றுக் கொடுக்கிறது
உதிர்ந்த சருகுகள்

எறிந்த கனவுகள்
உயிர் பெற்றது
சரித்திரத்தில்

விளையாட்டு
விதையானது
சிறுவர் காப்பகத்தில்

கசிந்த பழத்தில் ருசி அதிகம்
உணர்த்தினான்
தாள் சிறுவன்

யாரும் கற்றுக் தரவில்லை
வழிப் போக்கனுக்கு
கணித அறிவு

உதிர்ந்த மொட்டுக்களுக்கு
மீண்டும் உயிர் கொடுத்தது
நார் !

சிறை பட்ட கண்களுக்கு
விடுதலை
கண் தானம்

இரு ஜாதி குடுவையில்
ஒரு ஜாதிப் பூ
காதல்

வான் கூட்டில்
தேன் கசிவு
வாழ்த்தும் உயிரினங்கள்

வலியின் ஏற்ற இறக்கத்தை
அளந்து காட்டுகிறது
மூக்கு கண்ணாடி

ராஜா - ராணி ...!



@ ஒவ்வொரு பொங்கலும்
ஒளித்து வைத்துக்கொண்டே செல்கிறது

எதோ ஒரு ...
ராணிக்கான ராஜாவையும்
ராஜாவுக்கான ராணியையும் ...!



@ சக்கரமாய் சுற்றும் உலகில் 

சர்க்கரை பொங்கல் என்ன  

புதுசா 

பிச்சைப் பாத்திரத்துடன் சிறுவன் ...!

இயேசு - ஏழை

சிலுவை சுமத்தால் இயேசு 

கலப்பை சுமத்தால் ஏழை 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!

போகினா சாம்பல் 
பொங்கல்னா சாமி 

கரும்பு தின்னக் கூலியா 
காளையை அடக்கு ஜாலியா 

குலவைக்கு முன்னால்  வருவது நுரை 
குடும்பமே கூடி பார்ப்பது சின்னத்திரை 

கலர்கலராய் வரவேற்கிறது கோலம் 
கதிரவனுக்கே அது ஒரு மாயாஜாலம் 

தம்பதினா தலைப் பொங்கல் 
தல தளபதின வெற்றிப் பொங்கல் ...!


ஹிஷாலியின் ஹைக்கூ

கோபுர தரிசனம் 
கொடுப்பனை இல்லா 
பிச்சைக்காரன் ...!

அருவி இதழ் எண் - 19

உலர்ந்த கண்களோடு
மலர்ந்த பூக்களை விற்கிறேன் 
வறண்ட நாவிற்கு
ஒரு பிடி அரிசி கிடைக்காதா என்று

அறுந்த செருப்போடு
அறுந்து வரும் செருப்புகளைத்தைக்கிறேன்
இருண்ட குடிசைக்கு
ஒரு வாசல் கிடைக்காதா என்று

கிழிந்த புடவையும் 
மலிந்த முகமுமாய் 
வாகனத்தைத் தேடுகிறேன்
தகனம் செய்யும் தருணத்தில் வாய்க்கரிசிக்கு
ஒரு வழி கிடைக்காதா என்று

ஏதும் படிக்கவில்லை
அடையாளம் காட்டுகிறேன்
பழகிய தெருக்களில்
ஒரு வேளை பழைய சோறு கிடைக்காதா என்று

ஊனத்துடன் உழைப்பைக் 
கூட்டுகிறேன்
சலிப்பின் வியர்வை
ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று 

ஒண்டக் குடிசையில்லை
ஒய்யாரக் கூடத்தில்
கலவை சுமக்கிறேன்
பண்ட பாத்திரங்கள் எல்லாம்
ஒரு பாட்டில் மதுவிற்குள் மூழ்கிவிடக்கூடதென்று..!


mhishavideo - 145