ஒளி காட்டும் வழி !

பேசா தீபம்
பேசும் தீபத்தை
அணைப்பதல்ல தீபாவளி
பசிக்கும் கோயிலில்
பணத்திரியை
தூண்டுவதே தீபாவளி !
கல்லறையை சுருக்கி
கண்ணீரால் களிப்பதல்ல
தீபாவளி
கண்கள் சிரிக்க
காளையர் புசிக்க வருவதே
தீபாவளி
மழையில்லா இடி
மனமில்லா மின்னல்
மலர்வதல்ல தீபாவளி
மண்ணை பொன்னாக்கி
மனித சக்தியை ஒன்றாக்கும்
தீப ஒளியே தீபாவளி
ஓராயிரம் சுவாசங்கள்
ஒசோனை ஓட்டையாக்கி
ஒருக்குலைய வைப்பதல்ல தீபாவளி
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்று
நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி
போட்டி பொறாமையுடன்
பண்பாட்டை  பாழாக்குவதல்ல
தீபாவளி
புத்தாடை போனஸ் பலகாரத்துடன்
புண்ணிய ஆத்மாக்களை
வணங்குவதே தீபாவளி
எண்ணெய் குளியலில்
எண்ணிலடங்கா பாவங்களை
கழுவுவதல்ல தீபாவளி
எதிரியை நண்பனாக்கி
எச்சிலையை தேடும் பசிக்கு
எட்டா புகழை தேட
வழி
காட்டுவதே தீபாவளி

மதுவை குடித்து
மாவட்டம் மாவட்டமெல்லாம்
வன்முறையை வளர்ப்பதல்ல தீபாவளி
மரண வயது நூறாக்கி
மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து காட்டுவதே
சிறந்த தீபாவளி

22 comments:

  1. அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. Anonymous4:19:00 PM

    வணக்கம்

    உங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக சந்தோசமாக உள்ளது கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறோம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் ஐயா

      Delete
  4. மண்ணை பொன்னாக்கி
    மனித சக்தியை ஒன்றாக்கும்
    தீப ஒளியே தீபாவளி

    அருமை...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா

      Delete
  5. தீபாவளியைப் பற்றிய ஒரு புது சிந்தனையுடன் கவிதை புனைந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    //எட்டா புகழை தேட
    வலி காட்டுவதே தீபாவளி// வழி என்று இருக்க வேண்டுமோ?
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அம்மா

      Delete
  6. எதிரியை நண்பனாக்கி
    எச்சிலையை தேடும் பசிக்கு
    எட்டா புகழை தேட
    வலி காட்டுவதே தீபாவளி

    கருத்துள்ள வரிகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா

      Delete
  7. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  8. உண்மைதான்..அப்படி ஒரு தீபாவளி வரட்டும் இந்த வருடம்
    வாழ்த்துகள் ஹிஷாலி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அக்கா

      Delete
  9. ஒன்றே குலம்
    ஒருவனே தேவன் என்று
    நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி...
    நல்ல வரிகள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எதிரியையும் நண்பனாக்கும் வித்தையை சொல்லும் வரிகள்.. சிறப்புங்க.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்தக்கள்.

    ReplyDelete
  11. மிகவும் அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. Anonymous12:41:00 PM

    ''..மண்ணை பொன்னாக்கி
    மனித சக்தியை ஒன்றாக்கும்
    தீப ஒளியே தீபாவளி...''
    Eniya vaalththu,
    Vetha.Elangathilakam.

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145