சென்ரியுவாய்த் திருக்குறள் - 261 to 265

அறத்துப்பால் - துறவறவியல் - தவம்


குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 
அற்றே தவத்திற் குரு.

ஹிஷாலீ சென்ரியு 

தீமை வரவு 
நன்மை செலவு 
தவம் ...!

குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை 
அஃதிலார் மேற்கொள் வது.

ஹிஷாலீ சென்ரியு 

முற்பகல் ஒழுக்கம் 
பிற்பகல் தவம் 
வீண் போகாது ...!

குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் 
மற்றை யவர்கள் தவம்.

ஹிஷாலீ சென்ரியு 

துறவி தவம் 
பிறவி பிணி 
மறவாதீர் ...!

குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
எண்ணின் தவத்தான் வரும்.

ஹிஷாலீ சென்ரியு 

கண் எதிரியை விளக்கி
நல் அறிவை காட்டும்  
தவம் ...!

குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
ஈண்டு முயலப் படும்.

ஹிஷாலீ சென்ரியு 

தவத்தின் பெருமை
பலன் கிட்டும் 
தெய்வங்கள் ...!


12 comments:

  1. ம்

    தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா ...

      Delete
  2. அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா ...

      Delete
  3. முயற்சி தன்மெய் வருத்தக் கூலி தரும்.
    தங்களின் முயற்சி அற்புதம். தொடருங்கள் சகோ.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் இந்த திருக்குறள் செரியுவை நான் மட்டும் எழுதவில்லை என்னுடன் சேர்ந்து ரமேஷ் அண்ணாவும் ழுதுகிறார்கள் இந்த முயற்சிக்கும் முதல் புள்ளி வைத்தது ரமேஷ் அண்ணா தான் .
      என் வாழ்த்துகளும் அவரையே சேரும் நன்றிகள் அண்ணா

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா !

      Delete
  5. அருமை ஹிஷாலீ, ஆனால் தலைப்புதான் புரியவில்லை எனக்கு..

    ReplyDelete
    Replies
    1. அதாவது ஹைக்கூ போன்றே இந்த சென்ரியு இருவரிக் குறளை மூன்று அடியாக சுருக்கி கூறுவது தான் இது

      இப்போது பாருங்கள் இந்தக் குறளுக்கு மூன்று பேர் விளக்கவுரை எழுதியுள்ளார்கள் அனால் பொருள் ஒன்றுதான் அந்த பொருளையே தான் நாங்கள் மூன்று வரியில் முயற்சிக்கிறோம் இப்போது புரிந்ததா
      நானும் கத்துக்குட்டி தான் இன்னும் காத்துக்கொள்ள நிறைய உள்ளது


      குறள் 265:
      வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
      ஈண்டு முயலப் படும்.

      கலைஞர் உரை:
      உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.

      மு.வ உரை:
      விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

      சாலமன் பாப்பையா உரை:
      விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

      Delete

  6. வணக்கம்!

    பற்றுடன் தீட்டிய நற்றவச் சீா்களைப்
    பொற்புடன் கண்டே பொலிந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திகும் என் பணிவான நன்றிகள் ஐயா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145