வற்றாத காதல் ...!
விதையாய் வந்தாய் 
கணவால் மலர்ந்தாய் 
உயிராய் உதிர்ந்தாய் 
அன்பே ...

நிழலாய் தொடர்ந்தாய் 
மனத்தால் இணைந்தாய் 
கவியாய் பிறந்தாய் 
அன்பே ...

காற்றை நிறுத்திக் கேட்டேன் என் 
காதலை சொல்லச் சொல்லி 

காலம் வரும் பெண்ணே நீ 
காத்திரு காதலின் முன்னே என்றது  - விதையாய் ....

கவிதையை வருத்திக் கேட்டேன் என் 
கற்பனையை சொல்லச் சொல்லி 

கடலும் வற்றாது பெண்ணே அதுபோல் 
காதலும் தோற்காது நம் முன்னே என்றது  - விதையாய் ....

ஆஹா என்ன ஆனந்தம் 
அழகாய் விடிந்தது பேரின்பம் 

இனிமேல் எங்கள் டும்டும் 
இனிவாய் பிறந்திடும் வாழ்வின்பம் ...!4 comments:

 1. இனிய காதல் வரிகள்! அருமை! இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   தங்களுக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   Delete
 2. பெருகட்டும் வாழ்வின்பம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா ...

   இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...