வானம் நீர் இறைக்க
வரண்ட ஏரி கருணை வாக்க
பசுமை பட்டாடையில்
பன்னிறப் பூக்களைச் சூடி
மஞ்சள் சூரியனின்
மஞ்சத்தில் எழுந்தவள்
பறவைக்கும் வண்டுக்கும்
பாலுட்டி தாலாட்டி
காயும் கனியும்
கரும்பும் அணிந்த இன்பக்காட்சி
தருங் காலம் பொங்கல் காலம்
தலை நாள் போகி
போகியை அடுத்தது
பொங்கல் புது நாள்
அந்நாளில் பழையன கழிதலும்
புதியன புகுதலும் நிகழும்
வீட்டிலுள்ள பழம் பானைகள்
விடைபெறும்
புதுப் பானைகளில்
பொங்கல் நடைபெறும்
பால் பொங்கும் பொழுது
பொங்கலோ பொங்கல் என
மங்கல ஒலி எங்கும் கிளம்ப
பெண்கள் குரவையிட
பூவும் புகையும்
பொங்கலும் கொண்டு
இல்லுறை தெய்வத்தை வணங்கி
வயிறார உண்டு மகிழும்
தமிழர் அனைவர்க்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...!
அருமை
ReplyDeleteஅனைவர்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...!
உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா
Deleteஅனைவர்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
Delete