ஆழக்கடலில் நஞ்சுண்டு அங்கே
ஆயுது பார் மீன் நண்டு அதுலே
வலையை விரித்தான் கஞ்சிக்கு அவன்
வாழ்க்கை பயணமோ அஞ்சு பத்துக்கும்
கற்பை காத்தால் கண்ணகி அங்கே
கரையை மிதிக்கும் காதலர்களே
உப்பை தின்று வாழ்ந்தாலும் தமிழ்
கற்பை காப்போம் என மாறுங்கள் !
எத்திசையிலும் தமிழ் முழங்க நாம்
ஏணி போட்டு வாழ்ந்தாலும் இங்கே
காணி நிலம் கெட்டு விட்டால் நம்
கண்ணீர் கூட விஷமாகுமே !
மதுவை தின்று மாதுவைக் கொன்ற கரைகள்
மண்ணோடு மண்ணாக மறைந்தாலும்
இனி ஒரு மானுடம் இழிவை மறந்து
இதயம் துறந்து சபதம் எடுப்போம் வாருங்கள்
சாத்தான் புத்திக்கு சாட்டையடி தந்து
தமிழ் வளம் காத்த மண்ணில்
தலை நிமிர்ந்து சொல்லடா நாளை
நாளிதழில் நல்லனவை மற்றும் வருமடா
என்று மாறுவோம் மரணத்தை துறப்போம்
என்று இந்த இனிய புத்தாண்டு நல்நாளில் ...!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அக்கா
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையான கவிதை ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு அர்த்தத்தை சொல்லுகிறது வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள்
Deleteநல்ல கவிதை வாழ்த்துக்கள்.2013 நல்லனவற்றை அனைத்தையும் கொண்டு வரட்டும்.வாழ்த்துக்கள்/
ReplyDeleteஉங்கள் ஆசி போல் சிறக்கட்டும் ஐயா
Deleteமிக்க நன்றிகள் ஐயா
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
அன்பு நன்றிகள் ஐயா
Delete