மதுவின் சாபங்கள் ...!
















காந்தி சிரிக்க 
கஜானாப் பெருக்க 
மதுவில் மயங்குகிறான் 
இன்றையக் குடி மகன் !

அரை நாள் 
அயராது உழைத்தவன் 
அரை நொடி மரணத்தை 
சேமிக்கிறான் மது (மாது) வில்! 

என்ன தான் விஞ்ஞானம் 
மெய்ஞ்ஞானம் வளர்ந்தாலும் 
வாழ்க்கை தள்ளாடுகிறது 
வறுமை தராசில் !

நூறுக்கும் நூற்றி எட்டுக்கும் 
ஒரே பாட்டில் தான் 
உள்ளே போனால் மரணம் 
வெளியே ஏற்றினால் ஜெனனம் !

நீ தள்ளாடினாள் 
உன் வீடு தடம் மாறுகிறது 
குடிகாரனக்கு குடித்தனம் 
இல்லை என்றார்கள் 
குமுறுகிறாள் மனைவி !

மூன்று வேலை உணவு 
முழு நிலவாக 
அரையாடை கோலத்தில் 
அண்டை வீட்டைத் தேடுகிறாள் 
அடிக்கு பயந்து !

கணவனே கண் கண்ட 
தெய்வம் என்பது மருகி 
கள்ளச் சாராயமே 
கண்டெடுத்த தெய்வமானது 
ஒவ்வொரு குடிகாரனுக்கும் !

எவனொருவன் காந்தியை 
மதுவில் கரைத்தானோ 
அவனே நாளையை 
மரணத்தின் மைந்தன்! 

குடித்து கடிந்து பேசும் போது  
குமரியான மகள் 
வெக்கத்தில் விரைக்கிறாள் 
வெளி முகம் காட்ட 
மரணத்தை தேடி !

சீதையைக் கூட 
வேசியாய் பேசும் 
மதுச்‌ சொல் 
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது 
வீதியில் வீற்றிருக்கும் 
மனைவி பிணத்தைக் கண்டு !

அய்யோ என்ற போதும் 
அகிம்சை ஜெயிக்க வில்லை 
அருகில் பிணம் 
விதவைக் கோலத்தில் தாய் 
ஜெயிலில் மகன் !

தந்தையின் கொடுமையில் 
காதலை நேசிக்கிறாள் 
காலம் மாற்றும் என்று 
கடைசியில் காதலனும் மதுக் 
கடையைத் தேடினான் 
கண்ணீரில் மாது !

இழிவானக் கூட்டத்தில் 
இவனும் ஓர் இயந்திரம் தான் 
அரசியல் சூதாட்டத்தில் 
அலறி எறிந்தான் 
அவசர புத்தியால் அல்ல 
ஆல்ஹஹால் போதையால் !















2 comments:

  1. நல்ல வரிகள்...

    இந்த நாட்டின் மிகப் பெரிய சாபம்...

    மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. இது மாறாது என்று தான் நினைக்கிறேன் அண்ணா. அப்படியே மாறினால் மிகவும் சந்தோஷம் தான் மேலும் இதே தலைப்பில் மீண்டும் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

      நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145