எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் !


நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெல்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மனம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாளனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு