கிராமத்து கானம் ...!


மாலை வெயில் வான் மறைக்க
வண்ண மயில் தொகை விரிக்க
கான மழை பொலியுதடி தென்றல்
காற்றிலே மனம் வேகுதடி

முத்தான முத்தழகி நீ என்
முன்னாலே நில்லாத நொடி
பித்தான மயக்கத்திலே நான்
நித்தம் நித்தம் செத்து போனேனடி

நீ அத்தானு அழைக்கவே என்
ஆருயிர் ஏங்குதடி தமிழ் சொத்தான
என் முத்தல்லவோ நீ பத்து முறை
பாக்காமலே மனம் கண்டபடி தேடுதடி

பட்டு சேலை வாங்கி தாரேன்
பட்டாம் பூச்சாய் பறந்து வாடி
கட்டிக்கலாம் என் சிட்டு பொண்ணே
கெட்டி மேளம் கொட்டும் முன்னே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு