நம் பட்டம் எங்கே ...!


அன்று நாம் கற்ற கல்வி
இன்று அரசு வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் அடைக்காக்கிறது

கூமுட்டையாய் நாறும்
மூட்டை பூச்சிக்கு உணவாய்
மட்டும் அல்ல

நாட்டாமை பூச்சிக்கும் மாடிவீடும்
கோடிப் பணமும் கொட்டி கொடுக்கும்
பட்டங்களின் பள்ளி கூடமாய்

ஏழை கண்ணீர் துளிகள் நனையும்
மண்ணில் இப்படிபட்ட பன்னீர்
துளிகளும் வாழ்கிறது

பிற வாழ்க்கையை ஏமாற்றி
பேரும் புகழும் சம்பாதிக்க
மனிதா நம் பட்டம் எங்கே....?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு