காந்திஜி வாழ்க ....!


காலமெல்லாம் பேசும் காந்தி
காகிதத்தில் கை சேர்க்கும் காந்தி

உடுத்தும் ஆடையிலே நம்
உலகத்தை சுற்றிய காந்தி

படுத்தும் ஆங்கிலேயரை தன்
பாசத்தால் விரட்டியடித்த காந்தி

அஹிம்சையின் அரவணைப்பில்
அகிலம் வென்ற மாகாத்மாகாந்தி

முப்பது கோடி மக்களையும் தன்
முதுகெலும்பால் பாதுகாத்த அண்ணல்காந்தி

அரிசந்திர நாடகத்தில் நின்று அழியும்
நிலையில்கூட உண்மைபேசிய சத்தியவான்காந்தி

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றில்
கருணை மிகுந்த கருப்பு சிங்கமாம்காந்தி

உரிமை கொண்ட நாட்டினிலே தனியொரு
உப்பு சத்தியாகிரகத்தை வென்ற வெற்றிவீரராம்காந்தி

ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை சொல்லிதந்த
சத்திய ஜோதியாம் நம் காந்தி

தேசம் என் சொத்து தேசத்தில் பேசும்
மக்களே என் மூச்சு என்று கோசமிட்ட தேசக்காந்தி

அரிஜனரும் கல்வி கற்று இந்நாட்டை
ஆளவேண்டுமென அறப்போர் வென்ற மன்னனாம்காந்தி

உடல் மெலிந்தும் உயிர் பிரிந்தும் இவ்வுலகில்
உயிர்கொண்டு வாழும் உலக தந்தையாம் நம்காந்தி

கண்ணாடி போட்ட முன்னோடியாய்
காசே இல்லாத சுதந்திரத்தை வாங்கிதந்த

தாத்தா எங்கள் காந்தி தாத்தா .....
ஜெய்ஹிந்த் .....


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்