வெளிநாட்டு பயணமோ ...!


அடையும் துயரங்களை
அணைத்திடு உறவே நீ
அருகினில் இல்லாமல் நான்
அழுதிடும் நிலவோ ...!

இதோ
நிலவாய் நீந்துகிறேன் என்
நிழலாய் உன் முகம்
காண ..!

அதன்
பிரிவின் மனதால் நீ
அனுப்பும் கடிதமே
காலை கதிரவனோ ...!

இதில்
இடைப்பட்ட தூரத்தில்
இரு இதயங்கள்
நகரும் மாற்றமெல்லாம்
வெறும் காகிதத்தின்
கைவண்ணம் தானோ ...!

ஆம்
நம் மனதால்
தடைபட்ட பாசத்தை நீ
மறு ஜென்மமாய்
ஏற்கும் பெயர் தான்
வெளிநாட்டு பயணமோ ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...