நிலா பாட்டு ...!


வட்டமான வானத்தில் - பாட்டி
வடை சுட்ட வெண்ணிலா

தங்க தட்டு வானத்தில் - இரவில்
தாளம் போடும் வெண்ணிலா

வளரும் தேய்வும் வாழ்க்கையாய் - உலகில்
வாழ்ந்து வரும் வெண்ணிலா

பட்டி தொட்டி எங்குமே - சுற்றும்
பத்து காசில்லா வெண்ணிலா

நச்சத்திர கூட்டத்தில் - நீயே
நடனமாடும் வெண்ணிலா

உலகை ஆளும் உயரத்தில் - உயர்ந்து
உருண்டு வரும் வெண்ணிலா

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)