கல்வியின் வரலாறுகள் ...!


அன்று ....
எழுத்தாணியில் படித்த கல்வி
பசுமரத்தாணிப் போல் பதிந்தது
மனதில் ....!

நேற்று ....
பல்பத்தில் படித்த கல்வி
சொல் பதமாய் நுழைந்தது
காதில் ...!

இன்று ....
பென்சிலில் படிக்கும் கல்வி
பணப் பேயாய் விலையானது
நாட்டில் ...!

நாளை ....
கணினியின் படிப்பால் கல்வி
தட்டச்சில் பொறித்த காகிதமாய்
குப்பைத் தொட்டியில் .....!

எழுதும் கலை ஒன்று அதில்
விளையும் பயிர் நன்றல்லது இன்று

முடிந்தால் மாற்று முகவரியை அல்ல
உன் தலைவரி செல்வமாய் பூக்கும்
தமிழின் தாய் மொழியை ...!

கலை மொழியாய் பேசும்
செம்மொழியை நம் மொழியை
நம் தாய் மொழியை ...!

ஜெய்ஹிந்த்....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு