தமிழ் வெற்றி நடை போடு ...!


தனியொரு தேசம் வேண்டும்
நம் தரணியிலே நல்
தமிழொரு மனிதனாய்
தலை நிமிர்ந்து வாழ

படையெடு மனிதனே நன்
பாலகனாய் நம்மை அடியோடு
அழிக்கும்அநிதிகளை கண்டு
ஓடி ஒளியாதே

உதிரத்தில் தரித்த ஒற்றுமையை
உயிரினில் தரித்து உலகையே
எதிர்க்கு எதிரிகளுக்கு எறும்பாய் மாறி
கரும்பாய் இனிக்கும் கற்கண்டாய்

கார் மேகம் ஒன்று கடலாடும்
காற்றும் ஒன்று கயவர்களே
கண்ணீராய் சிந்தும் நீர் ஒன்று
நிலம் ஒன்று பின் ஏன்
நீ வேறு நான் வேறு என்று
ஏலமிடுகிறாய் இதோ

என் தேசத்து மக்கள்
எங்கெங்கும் ஜீவிக்க இனி
நம் தேசமாய் மாறு நாளை
மறந்து பலி தேசமாய்
பாதை மாறுவது சரிதானா

விடைகொடு மனிதா உன்
விதியை மாற்றும் கேள்விகளுக்கு
நல் கேள்வியாய் மாறி வேள்வியை
அறுத்து வீரை நடை போடு
தமிழ் வெற்றி நடை போடு ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...