கண்டேன் காதலியே ....!


காற்றில் களையும்
கருங்கூந்தலின் தாளத்தில்
தன்னை மறக்கும்
மலராய் வாசம் வீசக் கண்டேன்

காற்றின் நாணத்தில்
களையா வண்ண உடையில்
கட்டி தழுவும்
நூலாய் பின்ன கண்டேன்

கைகுலுக்கும் கண்ணாடி
நகத்தில் கலர் கலர்
நெயில்பாலிஷில் மின்னும்
பாதரசமாய் நுழைய கண்டேன்

மான் விழி மயங்கும்
தேன் துளி பார்வையில்
ஓர் விழி நிழலாய் உள் செல்லும்
கண்மையில் பேசக்கண்டேன்

நீ நான் நாம் என்று
உதிரும் உதடுகளின்
நடுவே நான் உயிராய்
உலவ கண்டேன்

உனதாய் எனதாய் பூசும்
பௌடரில் ஓர்
சிறுதுளி துகளாய்
முத்தமிடக் கண்டேன்

ஜதிபாடும் சலங்கை
ஒளியில் சலனமிடும்
வெள்ளி நிலவாய்
உரசக்கண்டேன்

பொன் பாதம் தீண்டும்
பூ மேனியில் உன்
புது உறவாய் பிறக்கும்
நிழலாய் மாறக்கண்டேன்

அடியெடுத்து வைக்கும்
அழகு பாதத்தில்
அட்டையாய் ஓட்டும்
அணிகலனாய்
பின் தொடரக்கண்டேன்

பெண்ணே இதையெல்லாம்
உன் மௌனத்தில் கண்டபோது
மனம் மயக்கத்தில்
நீந்தக்கண்டேன்

ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தலைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...