மூன்றெழுத்து பகுதி - 2


மூச்சில் சிதறும்
தூரல் மூன்றெழுத்து

தூரலில் நனையும்
சாரல் மூன்றெழுத்து

சாரலில் மயங்கும்
அருவி மூன்றெழுத்து

அருவியில் சேரும்
கடல் மூன்றெழுத்து

கடலை தாண்டும்
காற்று மூன்றெழுத்து

காற்றில் மிதக்கும்
படகு மூன்றெழுத்து

படகின் வலையில்
சிக்கும் சிற்பி மூன்றெழுத்து

சிற்பியில் திறக்கும்
முத்து மூன்றெழுத்து

முத்தாய் சிரிக்கும்
நிலவு மூன்றெழுத்து

நிலவில் முடியும்
இரவு மூன்றெழுத்து

இரவில் பிறக்கும்
பகல் மூன்றெழுத்து

பகலில் விரியும்
மலர் மூன்றெழுத்து

மலரில் வீசும்
வாசம் மூன்றெழுத்து

வாசத்தில் மயக்கும்
வண்டு மூன்றெழுத்து

வண்டின் ராகத்தில்
பாடும் குயில் மூன்றெழுத்து

குயிலை கண்டும்
சிணுங்கும் வானம் மூன்றெழுத்து

வானத்தின் வண்ணத்தில்
ஆடும் மயில் மூன்றெழுத்து

மயிலின் நடனத்தில்
பாடும் நாதம் மூன்றெழுத்து

நாதத்தில் மகிழும்
பாடல் மூன்றெழுத்து

பாடலில் கேக்கும்
ரசனை மூன்றெழுத்து

ரசனையில் மிகுந்த
ஆடல் மூன்றெழுத்து

ஆடலில் நனையும்
தேகம் மூன்றெழுத்து

தேகத்தின் மருந்தாய்
மாறும் பழம் மூன்றெழுத்து

பழத்தில் மிளிரும்
கொட்டை மூன்றெழுத்து

கொட்டையில் வளரும்
மரம் மூன்றெழுத்து

மரத்தில் விரியும்
தோப்பு மூன்றெழுத்து

தோப்பில் வாழும்
தேனீர் மூன்றெழுத்து

தேனீரில் குளிக்கும்
கோயில் மூன்றெழுத்து

கோயிலில் நிற்கும்
வாசல் மூன்றெழுத்து

வாசலை தாண்டும்
நேரம் மூன்றெழுத்து

நேரத்தில் உயரும்
வாரம் மூன்றெழுத்து

வாரத்தில் மறுக்கும்
மாதம் மூன்றெழுத்து

மாதத்தில் அடையும்
ஆண்டு மூன்றெழுத்து

இந்த ஆண்டை ஆளும்
ஆட்சி மூன்றெழுத்து.......!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு