காதல் சிணுங்கல்...!


யாரும் சொல்லாமல் 
யாரும் கேக்காமல் 
பாய்ந்தக் காதல் வெள்ளத்தை 

அலை அலையாய் கடந்த 
காதல் விழிகள் 
ஆனந்தக் கண்ணீரில் 
அபிஷேகம் செய்கிறது 
என் கன்னக் குழியில் 

அய்யோ 
அவன் கை தீண்டுகையில் 
என் கை தாளமிடுகிறது 
அவன் விழி பார்த்து 

இருந்தும் நாணத்தில் 
தவிக்கிறேன் 
காதல் காயத்தால் 

உயிரே 
மருந்தாக மாறிவிடாதே 
இலையேன் உன்னை நான் 
மறந்துவிடுவேன் 

வலியாக மாறி என் 
மொழியாக வந்து பின் 
ஒலியாகச் சேர்ந்து 
காதல் தூளியில் குளிக்கலாம் 
கணவன் மனைவியாக ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்