என் காதலும் புதியது...!


இளையவனே உன்னை என் 
இமைகள் காணவில்லை 
இருந்தும் உன்னைக் காண 
இதயம் துடிக்கிறது 
இதற்கு பேர் தான் காதலா?
அன்பே ...!
தோழனாய் இருந்த காவலனே 
உன்னை காதலனாய் மாற்றிய 
நினைவுகளை
நினைக்கையில் கண்ணீர் துளிகள் 
என்னை முத்தமிடுகிறது
ஊமையாய் பேசிய வார்த்தைகள்
எல்லாம் 
என் உதிரத்தில் கலந்ததால் 
உயிரியல் மாற்றம் கண்டு
உறுதி செய்கிறது 
உன் மீதான என் காதல்
அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும் 
ஆன்பே உன் அரைநொடி வாய்மொழி 
அமுதம் கேட்டால் போதும் என் 
ஆயில் அதிகரிக்கும்.
உன் மௌனம் அழகானது தான் 
இலையென் என் உணர்வுகள் புரிந்தும்
புரியாததுபோல் நடிப்பது இன்னும் 
என் துடிப்பை அதிகமாக்குகிறது 

இருந்து நீ எனக்கில்லை என்றாலும் 
உனக்காகவே வாழ்வேன் உன் 
நினைவில்...!!!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு