வானத்தை கேட்டுப் பாருடா -முன்ன
வாழ்ந்தவுங்க வாழ்க்கை சொல்லும் தானடா
மாடிகட்டி வாழ்ந்தவனும்
மண்ணடியில் தூங்குறான்
மண்ணை வெட்டி வீழ்ந்தவனும்
உன்மடியில் சாய்கிறான்
என்னை வெல்ல எவனுமில்லை
என்றவனு இல்லையே
எண்ணத்திலே நல்ல உள்ளம்
வீழ்ந்தும் வாழ்வது உண்மையே
கன்னியரு காதலெல்லாம்
பொய்த்துப் போனது முன்னையே
கண்ணன் வரும் கதையெல்லாம்
மெய்த்ததில்லையே பெண்ணிலே
ஆராரோ படிபுட்டேனே என்
அம்மாவை தான் விரட்டிவிட்டேனே
அப்பனாக வந்தபிறகும் என்
அப்பன் ஆத்த பாவம் புரிந்ததே
நொந்துபோன தேசத்திலே நான்
வெந்து வெந்து வாழ்கிறேன்
நேற்று வந்த மாற்றமெல்லாம்
நாளை வரும் காத்திருங்களேன்
புற்று போல ஏறிவிட்டதே விலை
விளைத்தவனும் ஏறவில்லையே
புறம்போக்கு இடமெல்லாமே
தெருப்போக்க எங்கும் இல்லையே
இயற்கை மகள் சீற்றத்தாலையும்
இறைவன் எழுதிவைத்த உயிர்கள் போகுதே
இன்னொரு ஜென்மம் வேண்டாமென்றே
பல இதயங்களும் சாவை தேடுதே
பூட்டி வைத்த வீட்டை போலவே
பணமும் வேட்டையாடி வென்றுப் பாக்குதே
புத்தி சொன்ன பட்டி கதையும்
வெறும் புத்தகத்தில் குப்பையாகுதே
காந்தி மகான் வாழ்ந்த தேசத்தில்
வெறும் காக்கை மட்டும் கூடுகட்டுதே
காலம் மாறி போன போதிலும்
கால் காசுக்காக பிச்சை கூடுதே
சொத்து மட்டும் சேர்க்க பாக்கிறான்
சொந்தத்தையே தள்ளி வைக்கிறான்
அக்கம் பக்கம் பேசாமலே வெறும்
ஆணவத்தால் அழிந்து போகிறான்
ஐயம் பூதம் மாறப்போனாலு மனித
இதயம் மட்டும் மாறிவிடாதே என்று
எழுதிவைத்தான் இறைவன் அன்றே
நான் எடுத்து வைத்தேன் கவிதையில் இன்றே
அட்டகாசமான பாடல்! சூப்பர்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html
மிக்க நன்றிகள் அண்ணா
Delete