வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு கோசலை என்ற பெண் தன்
கணவனால் கைவிடப்பட்டு ஊருக்கு ஓராமாய் உள்ள தன் நிலத்தில் சிறு குடிசை அமைத்து
அங்கே மாடு,ஆடு வாங்கி பால் பண்ணை ஒன்றையும் மற்ற இடங்களில் மா, தென்னை
,சப்போட்டா, கொய்யா என்று பலரக கனிகளை வளர்த்து தன் இரண்டு மகன்களையும்
காப்பாற்றி வந்தாள். கனிகள் அற்ற நேரத்தில் காயிந்த சருகுகளை விறகு.விளக்கமார்,
என்று விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தினாள்.வாயிக்கும் வயிற்றிக்கும் போக
மிஞ்சவே இல்லை.கடன் வாங்கி மகன்களை நல்ல படிப்பு படிக்க வைத்தாள்.
|
காலம் செல்ல செல்ல மகன்கள் இருவரும் பெரியவனாக
அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தல், அதே போல் திருமணமும் வெகு
சிறப்பாக நடந்தது மகன்கள் இருவரும் தனது மனைவியுடன் நகரத்திற்கு
குடியேறிவிட்டார்கள். தனது அம்மாவையும் கூட அழைத்தும் அவள் போகவில்லை. காரணம் செழிப்பான
நேரத்தில் மரங்கள் கனி தரும் செழிபற்ற நேரத்தில் இலைகள் வழிகள் தரும் இதை
விடுத்துச் சென்றால் அவை நன்றி அழிவைத் தரும் என்றாள்.
|
உடனே மகன்கள் இருவரும் சரி அம்மா நாங்கள் மாதம்
ஒரு முறை வருகிறோம் என்று சென்றனர்.
|
இப்படியே காலங்கள் செல்லச் செல்ல மகன்கள்
வரவில்லை,அவர்களின் ஆசையை நோக்கியே கண்கள் பயணித்தது கால்கள் போக மறுத்தது
|
வாயிகள் பேசியது அவள் வளர்த்த மரங்களுக்கிடையே
பிள்ளையை பெற்றால் கண்ணீரு தென்னையை பெற்றால் இளநீரு என்று கூறுவது போல்
அங்குள்ள செடி கொடிகள் மரங்கள் அனைத்தையும் தனது மகன்,மருமகள்,பேத்தி என்று
சொந்தம் கொண்டாடி மகிழ்ந்து வந்தாள்.
|
ஓர் நாள் திடிரென்று மாடுகள் அலறல் சத்தம்
கேட்டு வெளியே வந்தாள் நிறைஞ்ச அம்மாவாசை ஒரே இருட்டு தொழுவத்தில் இருந்து
இரண்டு பாம்புகள் தனது நவரத்தினங்களை அருகில் வைத்துவிட்டு நடனமாடியது. இவள்
காலடி சத்தமும், மாடுகள் சத்தமும் கேட்டு பாம்புகள் இரண்டும் அந்த காட்டில்
கிடக்கும் சருகுகளுக்கிடையே ஓடிவிட்டது.
|
நவரத்தினத்தை எடுத்த்தாள் அருகில் இருந்த
கோவிலுக்கு சென்றாள் இறவா இது என்ன சோதனை நான் வறுமையில் தவித்தபோது நீ
வரவில்லை, என் வறுமையை கண்டு பிள்ளைகள் அருகில் இல்லை. இந்த மண்ணும் சருகும்
தான் எனக்கு சொறுபோட்டது.இப்போது என் இதயம் சருகாகி இறந்த காலத்தை நோக்கி பயணிக்கும்
போது நவரத்தினம் எதற்கு இதை நீயே வைத்துக்கொள் என்று திரும்பினாள்
|
நில் கணவனை இழந்தும் கற்பு மாறா பெண்மையே நீ
செடி கொடுத்தாய் மரம் வளர்த்தாய் ஈ எறும்புக்கும் தீனி போட்டாய் ,பசியென
வருவோருக்கு ருசியாக கனி கொடுத்தாய், பிறர் உதவி பேணாமல் வலியவருக்கும் வாழ வழி
வகுத்தாய் உன்னால பூமி செழித்தது, உன் பிள்ளைகள் அழைத்தும் போகாமல் என்னையே
கெதியாக எண்ணி வறுமையிலும் வழி தவறாத நீ உண்மையேல் கடவுள் உனக்கு என்ன வரம்
வேண்டும் கேள் என்றார் கடவுள்
|
இறைவா உன்குரல் கேட்டு என் செவிகள் மோட்சம்
பெற்றது போல் என் கண்களும் மோட்சம் பெற வேண்டும் என்றாள்
|
உடனே கடவுள் அவள் முன் தோன்றி எண்ணை கண்ட நொடியில் உன் மரணம் மோச்சமாகும் மகளே, உன் இறுதி ஆசைப்படியே நீ வளர்த்த மரங்களின் சருகுகள் கொண்டே ஐய்ம் பூதங்களும் வாழ்த்துக்கள் பாட இறுதி சடங்கு நடைபெறும் என்று மறைந்தார். |
அவ்வாறே அவள் இறுதிப்பயணம் முடிந்தது தனது
இரண்டு பிள்ளைகளும் அந்த நவரத்தின கற்களை கொண்டு அந்த கோயிலை வெகு சிறப்பாக
கட்டி முடித்தும் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். ஊர் மக்கள் அனைவரும் அந்த
குடும்பத்திற்கே மாலை மரியாதையும்,பட்டாபிசேகம் கட்டியும் பேற்றினார்கள்.
இருவரும் பேர் சொல்லும் சருகுகளாய் ஊரெங்கும் பரவி ஜொலித்தார்கள்.
|
வித்தியாசமான எழுத்து நடை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteword verificatinionஐ கமெண்ட் செட்டிங்சில் சென்று நீக்கிவிடுங்கள்! தளம் வரும் பார்வையாளர்கள் கமெண்ட் செய்யும் போது இதை பெரும்பாலும் விரும்புவது இல்லை! இதனால் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்காமல் போகலாம்! இது என்னுடைய ஆலோசனை விருப்பம் இருந்தால் பின்பற்றுங்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in
அப்படியே செய்கிறேன் அண்ணா இனியும் தவறுகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் நான் வருத்தப்படவே மாட்டேன் அண்ணா தங்கள் தினசரி வருகைக்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
Deleteஅண்ணா இப்போது பாருங்கள் சரியாக உள்ளது என்று கூறுங்கள் அண்ணா அப்படியே உங்கள் தொலைபேசி என்னையும் எனக்கு தாருங்கள் அண்ணா
Delete