சருகுகள் மீண்டும் மலராகாது
ஆனால் ஓர்
நாள்
விதையாகும்
சரித்திரத்தில்
எத்தனை
காரிய இருளில்
கை கோர்க்கும்
சருகுகள்
சலனத் தீயில்
சாம்பலாகியது
எத்தனை
சருகை தொட்டப்
பூக்கள்
மண உயரத்தில்
பூஜித்தாலும்
மரணம் தீண்டியாதும்
சொர்க்கத்தை
தேடும் கண்ணீர்
பூக்கள் எத்தனை
புங்கமரச்
சருகுகளில்
புரண்டு கிடக்கிறது
புன்னகையை
இழந்த
பெண்மையின் விலைகள்
எத்தனை
ஏழைச்
சருகுகள்.
ஏலம் போகிறது
மண்ணில்
கண்ணீர் காசுக்கு
பண்ணீர் தேடும்
அரசியல்வாதிகள்
எத்தனை
போன மையில்
மொட்டையான
மரங்கள்
ஆயிரம்
கதைகளுடன்
ஆவியாகும்
சருகுகளின்
ஓவியங்கள்
தீட்டும்
உணர்வுகள் எத்தனை
நொறுங்கும் சருகுகள்
வேள்வியாகி விரதம்
கொண்டு
வெற்றிக்காக
போராடும்
வெள்ளை
பூக்களில்
வேராய் நிற்கும்
கன்னிகள் எத்தனை
முடிவற்ற
பாதையிலும்
தொடர வைத்தது
சருகுகள்
அநாதை என்ற
முதல் எழுத்தை
மாற்றி
தலை எழுத்து பசுமை
பெற
போராடும் இளம்
இதயங்கள்
எத்தனை
சருகுகள்
கரம்கொண்டு.
உருவங்கள் செய்யும்
காதலருக்கு
தோல்விக்காகவே
நான்னிருக்கிறேன்
கவிதை என்ற
காதலனாய்(காதலியாய்)
உன்னுடன் பயணிக்க
என்று உலரும்
கவிஞர்கள் எத்தனை
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...