|
| குறள் 21: |
| ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
| வேண்டும் பனுவல் துணிவு |
ஹிஷாலீ சென்ரியுக்கள்
|
| துறவிகள் |
| ஆசையில்லா ஒழுக்கம் |
| சிறந்த நூல்...! |
|
| பிறப்பு நூல் சிறப்பே |
| உறுதியான |
| ஒழுக்கம்...! |
|
| மேன்மக்கள் |
| துறவி ஒழுக்கம் |
| சரித்திர நூல்...! |
|
குறள் 22: |
| துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து |
| இறந்தாரை எண்ணிக்கொண் டற்று |
ஹிஷாலீ சென்ரியுக்கள்
|
| நிகரில்லா |
| அளவுகோல் |
| இறப்பு பற்று...! |
| |
| பிறப்பு இறப்பு |
| கணக்கிடப்படுகிறது |
| உத்தமர்கள்...! |
 |
| குறள் 23: |
| இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் |
பெருமை பிறங்கிற்று உலகு
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| நன்மை தீமை |
| களைவது |
| நல்லோர் பண்பு...! |
|
| இம்மை |
| மறுமை |
| துறந்தோர் ஞானி...! |
|
| இரண்டில் ஒன்றை |
| அறுத்தவர் |
| உலகில் நிலைப்பார்...! |
|
| தீமையில்லா |
| பேரும் புகழும் |
| பிறப்பு வீடு...! |
 |
| குறள் 24: |
| உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் |
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| துறவற நிலத்தின் |
| விதைகள் |
| ஐம்பொறிகள்...! |
|
| நல் விதைகள் |
| நாற்றமற்ற ஆசை |
| வீடுபேறு...! |
|
| ஐம் புலன்கள் |
| உறுதி அங்குசம் |
| இறைவனுக்கு சமம்...! |
 |
| குறள் 25: |
| ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் |
இந்திரனே சாலுங் கரி
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| அடங்கா ஆசைக்கு |
| அடங்குபவர் |
| இந்திரன்...! |
|
| புலன் வழி |
| அறுத்தவன் |
| உலகின் கோமான்...! |
|
| ஐய்புலன் |
| ஒழித்தவன் |
| வான்புகழ் மன்னன்...! |
 |
| குறள் 26: |
| செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் |
செயற்கரிய செய்கலா தார்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| பிச்சைக்காரன் |
| இரத்த தானம் |
| மேன்மக்கள்...! |
|
| பணக்காரனிடம் இல்லை |
| ஏழையிடம் உள்ளது |
| தான தருமங்கள்...! |
|
| இறைவனின் பண்பு |
| மகனிடம் |
| சிறியோர் பெரியோர்..! |
 |
| குறள் 27: |
| சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் |
வகைதெரிவான் கட்டே உலகு.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| ஐந்தின் சுவை |
| மறந்தவன் |
| மனித கடவுள்...! |
|
| சுவை அறுத்தவன் |
| பின்... |
| வசப்படும் உலகம்...! |
|
| ஆறில் ஐந்தை |
| அறுப்பவன் |
| அறிவில் உயர்ந்தவன்...! |
 |
| குறள் 28: |
| நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
மறைமொழி காட்டி விடும்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| இம்மை மறுமை |
| பேசும் நூல்கள் |
| இறவா மக்கள்...! |
|
| நிறைமொழி |
| மறைமொழி |
| அழியா மந்திரம்...! |
|
| நாவின் சுத்தம் |
| நூலின் வடிவில் |
| சான்றோர்கள்...! |
 |
| குறள் 29: |
| குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
கணமேயும் காத்தல் அரிது.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| நற்ப்பண்பு |
| சிலநொடியில் அழிந்திடும் |
| பெரியோர் கோவம்...! |
|
| நிலைக்கவில்லை |
| பெரியோர் கோவம் |
| நீரின் மேல் எழுத்துப் போல்...! |
|
| மலை துளி கோவம் |
| புன்னகை தாகம் |
| பெரியோர்பண்பு...! |
 |
| குறள் 30: |
| அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் |
செந்தண்மை பூண்டொழுக லான்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| அண்ட உயிர்களுக்கு |
| அன்பு செலுத்துபவன் |
| அந்தணர்...! |
|
| உலகின் |
| சரி பாதி |
| அந்தணர் அன்பு...! |
|
| நிறைவோ குறைவோ |
| அறியா அந்தணர் |
| அன்பில் உயர்ந்தவர்...! |
 |
| குறள் 31: |
| சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு |
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| செல்வம் சிறப்பு |
| ஈடில்லை |
| நல்லறம்...! |
|
| மழை செழிப்பு |
| மனிதன் சிறப்பு |
| நல் அறவழி....! |
|
| சொலவம் சிறப்பு |
| இல்லா மனிதன் |
| உயிரற்ற பொம்மை...! |
 |
| குறள் 32: |
| அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை |
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| கோடிக்கேடு |
| ஒரே அறம் |
| தீரும் பாவங்கள்...! |
|
| அறத்தை மறந்தவன் |
| அறிவை இழக்கிறான் |
| தீயநிலத்தில்...! |
|
| நன்மை விளையும் |
| நிலத்தில் |
| மேன்மை செழிக்கும்...! |
 |
| குறள் 33: |
| ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| சமத்துவத்தின் |
| சந்நிதானம் |
| அறம்...! |
|
| தீயவருக்கும் |
| தேடிப்புரிக |
| அறச்செயல்கள்...! |
|
| ஜாதிமாதம் பார்க்கா |
| நல்லறம் |
| நல் மோட்சம்...! |
 |
| குறள் 34: |
| மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் |
ஆகுல நீர பிற.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| வெளுத்த ஆடை |
| அழுக்கில்லா மனம் |
| ஆடம்பரமில்லா வாழ்க்கை...! |
|
| குற்றம் கலைந்தவன் |
| சுற்றம் பெருகும் |
| அன்பின் வாசல்...! |
|
| வேடங்கள் பலவானாலும் |
| பாவங்களில்லா மனிதன் |
| உலகின் கண்...! |
 |
| குறள் 35: |
| அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் |
இழுக்கா இயன்றது அறம்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| அறவழிப் பயணம் |
| தொடர்கிறது... |
| அழுக்கின் நான்கு...! |
|
| தீயஆசை பொறாமை |
| கோவம் அறுத்தது |
| பரிசுத்த ஆன்மா...! |
|
| அடுத்தவன் புகழ் |
| வாழ்க்கையின் படிக்கட்டு |
| நான்கை விலக்கினால்...! |
 |
| குறள் 36: |
| அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது |
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| நொடிகள் மறவா |
| அறம்... |
| இறவாபடிகள்...! |
|
| உடலின்றி துணை |
| உலகில் |
| காலம் கடத்தா அறம்...! |
|
| வயதுகள் தேடா நல்லறம் |
| வாழ்கையின் |
| துணை வரம்...! |
 |
| குறள் 37: |
| அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை |
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| இறைவன் பல்லாக்கு |
| இதயமும் சென்றது |
| அறம் துறந்தார்...! |
|
| இன்பம் துன்பம் |
| பல்லாக்கில் இல்லை |
| அறத்தில் உள்ளது...! |
|
| அளவில்லா அறம் |
| ஆண்டவன் பல்லாக்கு |
| துறந்தார் தீயவழி...! |
 |
| குறள் 38: |
| வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் |
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| வாழும் நாள் |
| வாழ்க அறம் |
| பிறவா கல்...! |
|
| கழியா அறம் |
| கைமேல் பலன் |
| வாழ்க்கை சீர்...! |
|
| பிறவிதுறவறம் |
| ஈடில்லா நாட்கள் |
| திரும்பா கல்...! |
 |
| குறள் 39: |
| அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் |
புறத்த புகழும் இல.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| தூயறம் |
| இன்பத்தருணம் |
| வாழ்க புகழ்...! |
|
| அறத்தின் இன்பம் |
| ஆழ்கடல் துன்பம் |
| தூய மனது..! |
|
| அறத்தை நாடதோர் |
| பிறவழி இன்பதுன்பம் |
| பேர் அற்றது...! |
 |
| குறள் 40: |
| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு |
உயற்பால தோரும் பழி.
ஹிஷாலீ சென்ரியுக்கள் |
|
| சிறார் திறமை |
| பெரியோர் புகழ்வது |
| உயர்ந்த அறம்...! |
|
| புகழ் மறந்து |
| அறம் புரிந்தது |
| பழியாபுகழ்...! |
|
| பழி பாவம் |
| தீர்க்கும் மருந்து |
| அறனே...! |
|
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...