சென்ரியுவாய்த் திருக்குறள் - 41 to 50



குறள் 41: 
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.
ஹிஷாலீ சென்ரியு 
மூன்று இயற்கை
முத்தான மருந்து
கடமை...!
மூவழி சொந்தம் 
துணை நிற்பது
இல்லறம்...!
கடமையின் s
முதல் படி
மூவர் அறப்படி...!



குறள் 42: 
துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை.
ஹிஷாலீ சென்ரியு
இல்லறம் 
இனிக்க 
ஈகை நன்று...!
துறந்தவர் வறியவர் 
உதவுபவன் 
நல்ல கணவன்...!
மறைந்த தாய் 
வறுமை வாழ்க்கை 
கணவனே கண்கண்ட தெய்வம்...!

குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
ஹிஷாலீ சென்ரியு
மூத்த தலைவர்கள் 
வாழ்வின் முதுகெலும்பு 
அறநெறி தவறாமை...!
வான் வாழ் மக்கள் 
செய்யா உதவி
ஏழைக்கு உதவுவது சிறப்பு...!
மறைந்த தெய்வங்கள் 
நிறைந்த விருந்தோம்பல் 
சிறந்த இல்வாழ்க்கை...!

குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
ஹிஷாலீ சென்ரியு
கோடி பொருள் செல்வம் 
குறைவில்லா பண்பு 
வாழ்வின் ஒழுக்கம்...!
காக்கையின் குணம் 
பழியில்லா பண்பு 
அழியா ஒழுக்கம்...!
பாவமில்லா பொருள் 
அழியா புண்ணியம் 
பரம்பரைக்கே...!

குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.
ஹிஷாலீ சென்ரியு
இல்லறம் 
நல்லறம் பெற 
தூய அன்பு போதும்...!
பயன் அறியா 
பண்பு செய்தால் 
இல்வாழ்க்கை செழிக்கும்...!
ஈதல் குணம் 
சுற்றத்தின் அன்பு 
இனிய குடும்பம்...!


குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன்.
ஹிஷாலீ சென்ரியு
சிரம் தாழ்த்தி 
சினமறியா இல்வாழ்க்கை 
ஏழுஜென்ம பயன்
அறநெறி பயன்
இடையூறு இல்லா 
இல்வாழ்க்கை 
துரவரமற்ற முனிவர் 
தூய இல்லறம் 
மக்கள் பேர்


குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.
ஹிஷாலீ சென்ரியு
இல்வாழ்க்கையின் 
சிறந்த இலக்கண
நல்லோர் போற்றுவது 
அறம் அறிந்து 
இயல்போடு நடப்பவன் 
அதிசிய மனிதன்
கடவுள் மனைவி 
இரண்டும் 
அறநெறி கண்கள்

குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.
ஹிஷாலீ சென்ரியு
துறவி நோன்பு 
பிறவி பயன் 
கிட்டா பேர் புகழ்
தன் அறம்
பிற அறமாகக்கடவுக 
வாழ்க்கை வளம்பெறும்
துறப் பெருமையைவிட 
அற இல்வாழ்க்கை 
ஆண்மையின் வலியது

குறள் 49:
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
ஹிஷாலீ சென்ரியு
கணவனின் தாரகமந்திரம் 
பழியில்லா புண்ணியம்
நல்ல மனைவி
குற்றமற்ற இல்வாழ்க்கை 
குறைவில்லா நன்மை 
பிறர் பழியா நன்று 
கோவலன் 
கண்ணகி 
பழிவாங்கியது மதுரை

குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
ஹிஷாலீ சென்ரியு
அறநெறி தவறா
கணவன் மனைவி 
வானின் தேவர்கள் 
அறத்திற்கு இணையானது 
தெய்வத்தின் அருங்குணங்கள் 
பொருந்திய இல்வாழ்க்கை 
பூமியின் ஒழுக்கம் 
வானில் மின்னுகிறது 
கடவுள் வடிவில் மனிதன்






சென்ரியுவாய்த் திருக்குறள் - 21 to 40


குறள் 21: 
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஹிஷாலீ சென்ரியுக்கள்  
 
துறவிகள் 
ஆசையில்லா ஒழுக்கம் 
சிறந்த நூல்...!
பிறப்பு நூல் சிறப்பே 
உறுதியான 
ஒழுக்கம்...!
மேன்மக்கள் 
துறவி ஒழுக்கம் 
சரித்திர நூல்...! 

குறள் 22: 
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

ஹிஷாலீ சென்ரியுக்கள்  
நிகரில்லா 
அளவுகோல்
இறப்பு பற்று...!
  
பிறப்பு இறப்பு 
கணக்கிடப்படுகிறது 
உத்தமர்கள்...!
குறள் 23: 
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
நன்மை தீமை 
களைவது 
நல்லோர் பண்பு...!
இம்மை 
மறுமை 
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா 
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
குறள் 24: 
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
துறவற நிலத்தின் 
விதைகள் 
ஐம்பொறிகள்...!
நல் விதைகள் 
நாற்றமற்ற ஆசை
வீடுபேறு...!
ஐம் புலன்கள் 
உறுதி அங்குசம்
இறைவனுக்கு சமம்...!
குறள் 25: 
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
அடங்கா ஆசைக்கு 
அடங்குபவர் 
இந்திரன்...!
புலன் வழி 
அறுத்தவன் 
உலகின் கோமான்...!
ஐய்புலன் 
ஒழித்தவன் 
வான்புகழ் மன்னன்...
குறள் 26: 
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
பிச்சைக்காரன்
இரத்த தானம் 
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை 
ஏழையிடம் உள்ளது 
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு 
மகனிடம்
சிறியோர்  பெரியோர்..!
குறள் 27: 
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
ஐந்தின் சுவை 
மறந்தவன் 
மனித கடவுள்...!
சுவை அறுத்தவன் 
பின்...
வசப்படும் உலகம்...!
ஆறில் ஐந்தை 
அறுப்பவன் 
அறிவில் உயர்ந்தவன்...!
குறள் 28: 
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
இம்மை மறுமை 
பேசும் நூல்கள்
இறவா மக்கள்...!
நிறைமொழி 
மறைமொழி
அழியா மந்திரம்...!  
நாவின் சுத்தம் 
நூலின் வடிவில் 
சான்றோர்கள்...!
குறள் 29: 
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
நற்ப்பண்பு 
சிலநொடியில் அழிந்திடும்
பெரியோர் கோவம்...! 
நிலைக்கவில்லை 
பெரியோர் கோவம்
நீரின் மேல் எழுத்துப் போல்...! 
மலை துளி கோவம் 
புன்னகை தாகம் 
பெரியோர்பண்பு...! 
குறள் 30: 
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
அண்ட உயிர்களுக்கு 
அன்பு செலுத்துபவன் 
அந்தணர்...!
உலகின் 
சரி பாதி
அந்தணர் அன்பு...!
நிறைவோ குறைவோ 
அறியா அந்தணர் 
அன்பில் உயர்ந்தவர்...!
குறள் 31: 
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
செல்வம் சிறப்பு
ஈடில்லை
நல்லறம்...!
மழை செழிப்பு 
மனிதன் சிறப்பு 
நல் அறவழி....!
சொலவம் சிறப்பு 
இல்லா மனிதன் 
உயிரற்ற பொம்மை...!
குறள் 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
கோடிக்கேடு 
ஒரே அறம் 
தீரும் பாவங்கள்...!
அறத்தை மறந்தவன் 
அறிவை இழக்கிறான் 
தீயநிலத்தில்...!
நன்மை விளையும்
நிலத்தில் 
மேன்மை செழிக்கும்...!
குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
சமத்துவத்தின் 
சந்நிதானம் 
அறம்...!
தீயவருக்கும் 
தேடிப்புரிக
அறச்செயல்கள்...!
ஜாதிமாதம் பார்க்கா 
நல்லறம் 
நல் மோட்சம்...!
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
வெளுத்த ஆடை 
அழுக்கில்லா மனம் 
ஆடம்பரமில்லா வாழ்க்கை...!
குற்றம் கலைந்தவன் 
சுற்றம் பெருகும் 
அன்பின் வாசல்...!
வேடங்கள் பலவானாலும் 
பாவங்களில்லா மனிதன் 
உலகின் கண்...!
குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
அறவழிப் பயணம் 
தொடர்கிறது...
அழுக்கின் நான்கு...!
தீயஆசை பொறாமை 
கோவம் அறுத்தது 
பரிசுத்த ஆன்மா...!
அடுத்தவன் புகழ் 
வாழ்க்கையின் படிக்கட்டு 
நான்கை விலக்கினால்...!
குறள் 36:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
நொடிகள் மறவா 
அறம்...
இறவாபடிகள்...!
உடலின்றி துணை 
உலகில்
காலம் கடத்தா அறம்...!
வயதுகள் தேடா நல்லறம் 
வாழ்கையின் 
துணை வரம்...! 
குறள் 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
இறைவன் பல்லாக்கு  
இதயமும் சென்றது 
அறம் துறந்தார்...!
இன்பம் துன்பம் 
பல்லாக்கில் இல்லை 
அறத்தில் உள்ளது...!
அளவில்லா அறம்
ஆண்டவன் பல்லாக்கு
துறந்தார் தீயவழி...! 
குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
வாழும் நாள் 
வாழ்க அறம்
பிறவா கல்...!
கழியா அறம் 
கைமேல் பலன்
வாழ்க்கை சீர்...!
பிறவிதுறவறம் 
ஈடில்லா நாட்கள் 
திரும்பா கல்...!
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
புறத்த புகழும் இல.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
தூயறம் 
இன்பத்தருணம்
வாழ்க புகழ்...!
அறத்தின் இன்பம் 
ஆழ்கடல் துன்பம் 
தூய மனது..!
அறத்தை நாடதோர்
பிறவழி இன்பதுன்பம் 
பேர் அற்றது...!
குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
சிறார் திறமை 
பெரியோர் புகழ்வது 
உயர்ந்த அறம்...!
புகழ் மறந்து 
அறம் புரிந்தது 
பழியாபுகழ்...!
பழி பாவம் 
தீர்க்கும் மருந்து 
அறனே...!

mhishavideo - 145