புத்தாண்டு சபதம் ...!



ஆழக்கடலில் நஞ்சுண்டு அங்கே
ஆயுது  பார் மீன் நண்டு  அதுலே
வலையை விரித்தான் கஞ்சிக்கு அவன்
வாழ்க்கை பயணமோ அஞ்சு பத்துக்கும்

கற்பை காத்தால் கண்ணகி அங்கே
கரையை மிதிக்கும் காதலர்களே
உப்பை தின்று வாழ்ந்தாலும் தமிழ்
கற்பை காப்போம் என மாறுங்கள் !

எத்திசையிலும் தமிழ் முழங்க நாம்
ஏணி போட்டு வாழ்ந்தாலும் இங்கே
காணி நிலம் கெட்டு விட்டால் நம்
கண்ணீர் கூட விஷமாகுமே !

மதுவை தின்று மாதுவைக் கொன்ற கரைகள்
மண்ணோடு மண்ணாக மறைந்தாலும்
இனி ஒரு மானுடம் இழிவை மறந்து
இதயம் துறந்து சபதம் எடுப்போம் வாருங்கள்

சாத்தான் புத்திக்கு சாட்டையடி தந்து
தமிழ் வளம் காத்த மண்ணில்
தலை நிமிர்ந்து சொல்லடா நாளை
நாளிதழில் நல்லனவை மற்றும் வருமடா
என்று மாறுவோம் மரணத்தை துறப்போம்
என்று இந்த இனிய புத்தாண்டு நல்நாளில் ...!




இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - 2013



வண்டுக்கு தாய் மலருமில்லை 

வானுக்கு தாய் மண்ணுமில்லை 

யாருக்கு யார் தாய் என்று 
அறிந்ததில்லை இவ்வுலகில் 

யாவரும் ஓருயிர் தாம் என்று உணர்த்திட 

வாழ்வோம் பல்லாண்டு ...!


(என்னை வழிநடத்திய அனைத்து உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் )

mhishavideo - 145