| அதிகமான ஏக்கம் |
| ஆர்ப்பரிக்கும் மனசு |
| இடையிடையே |
| துள்ளிக் குதிக்கும் கவிதை |
| நின்று நிதானமாய் |
| ஏறி இறங்கும் ஞாபகம் |
| தடபுடலாய் |
| ஓடி ஓளியும் இதயத் துடிப்பு |
| மிருகமாய் அவ்வப்போது |
| எட்டிப்பார்க்கும் கோபம் |
| தனக்கு தானே |
| சிரித்து மகிழும் புன்னகை |
| இவற்றைத் தாண்டியும் |
| தன்னலத்தோடு தேடுகிறது |
| தலைமறைவாகப் |
| பதுக்கி வைத்த |
| முதல் காதலை.....! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...