உழவும் தொழிலும் !




உழவும் தொழிலும் உலகினிரு கண்கள் 
உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல் 
தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள் 
தலை முறை பசி தீர்த்திடுமே உழவரின் கரங்கள்   
காணி நிலமும் கதிரவன் ஒளியும் 
கடவுளேனெக் கொண்டு களம் சேர்த்த 
நெல் மணிகள் உறவேதும் பாராது 
உலகுக்கே படியளந்த விவசாயி 
வளம் மிகுந்த மண்ணில் விலை உயர்ந்த 
இயந்திரம் மக்கள் பஞ்சம் தீர்த்துவைக்க 
மழையைத் தேடி  நிலைகுலைந்த விவசாயி 
இப்போது நிர்க்கதியா நிற்கின்றான் 
விலை நிலத்திலே வீடு வந்து குடியேற 
விற்றவனுக்குச் சோறுமில்லை பெற்றவனுக்குக் 
கூழுமில்லை கால் வயிறு கஞ்சிக்காகக் 
கல்லறையைத் தேடித் திரிகிறான் விவசாயி
அடைக்கலம் கொடுக்க அரசுமில்லை 
ஆதரித்துக் கரைசேர்க்க ஆளுமில்லை 
கூறு போட்டு ஆட்சியிலே கொடிகட்டிப் 
பறக்கிறது பார் பஞ்சமென்னும் அன்னக்கொடி !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145