![]() பனித்துளியாக மாறினேன் |
என்னவள் |
இதழ் விரிகையில் ...! |
மின்னஞ்சல் தாக்கி |
உயிரிழக்கவில்லை |
கூகுள் ...! |
வான் விழியில் |
வர்ண ஜாலங்கள் |
வாங்க மறுக்கும் குடை ...! |
குளிரில் தவிக்கும் நதிக்கு |
வெளிச்சம் கொடுக்கிறது |
நிலவின் அரவணைப்பு …! |
அழிவென்று தெரிந்தும் |
ஆசை கொள்கிறது |
அகிலம் ...! |
ஆடும் கிளைகளை பார்த்து |
ஓடுகிறது |
சூரியன் ...! |
தட்சணைச் சோற்றை தின்று |
கொழுத்து திரிகிறது |
கோயில் எறும்பு ...! |
கிள்ளி எறிந்த கீரையில் |
நிரம்பிக்கிடக்கிறது |
அல்ல முடியாத நீர் சத்து ...! |
கடவுளின் பெயரைச் சொல்லி |
சாமிக்கு தாலி கட்டினார் |
ஆசாமி ...! |
மும்மதப் பிராத்தனை |
சம்மதம் தந்தாள் |
முதிர் கன்னி ...! |
குறுகிய இரவு |
நீண்டுகொண்டே போகிறது |
காதலியின் ஏக்கம் ...! |
சித்தர் மலை |
தவமிருக்கும் |
கஞ்சாசெடிகள் …! |
அக்கினிப் பரிச்சை |
வலம் வருகிறது |
காற்று ...! |
விரல் நுனி
|
திரும்பிப் பார்த்தேன்
|
இனித்தது வாழ்க்கை ..!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !
Labels:
ஹைக்கூ

விடியலின் கொடுமை !

ஒளிந்து விளையாடும்
கனவுக்கு
தெரியாது
விடியலின் கொடுமை !
தனக்குத் தானே
பேசி மகிழும்
கற்பனைக்கு
தெரியாது
காகிதத்தின் வலிமை !
இரவு பகல் பாரது
இதயம் ஏங்கும்
அழிவுக்கு
தெரியாது
கல்லறையின் பெருமை !
நினைவுகளை சுமந்து
கனவுகளில் பறந்து
இதயத்தில் அமரும்
காதலுக்கு
தெரியாது
கண்ணீரின் இனிமை !
தெரிந்தும் தெரியாமல்
அறிந்தும் அறியாமல்
அங்கிங்கும் வாடும்
உறவுக்கு
தெரியாது
காலத்தின் கடமை !
Labels:
காதல் கவிதைகள்

முத்தம் (முற்றம் ) ...!

காதலில் மட்டும்
குறையாத முத்தம்
கல்யாணத்திற்கு பின்
மொத்தமாக குத்தகைக்கு
எடுத்துக் கொண்டது
என் வீட்டு முத்தம் (முற்றம் )
Labels:
காதல் கவிதைகள்

காதல் மழை ...!

அலைக்கும் ஆதவனுக்கும்
உள்ள நடப்பு
ஆவியாகி
காதல் மழை
பொழிவதில் தான்
சுழல்கிறது பூமி ...!
Labels:
காதல் கவிதைகள்

காலம் ...!
![]() நாள் ஈசலானது |
வாரம் பட்டாம் பூச்சியானது |
மாதம் கருவானது |
இந்த மூன்றையும் |
ஆண்டு ஆளுகிறது காதல் ...!(காலம் ) |
Labels:
பொதுவானவை

Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...