இனிக்கிறது மழைத்துளி ...!

அழுவதை மறைத்து 
இனிக்கிறது 
மழைத்துளி 
அளவுக்கு மீறினால் 
அமுதமும் (அகிலமும்)
 நஞ்சென்று ...!

ஹிஷாலியின் ஹைக்கூ

பாட்டி அம்மாவசை 

படையலுடன் 

தாத்தாவின் கண்ணீர் ...!

கண் தானம் ...!விடியலைத் தந்து 

இருளில் மறையும் 

நிலவைப் போல ...
இருண்டவர் உலகம் 

விடியலைப் பெற 

கண் தானம் செய்வீர் ...!


மறந்து ...! - part 2

புயல் அடித்த 
சந்தோசத்தில் 
கரை புரண்டது அலை 
தந்தான் 
சுனாமி என்பதை 
மறந்து ...!
மழை அடித்த 
சந்தோசத்தில் 
இளைப்பாறும் தொழிலாளி 
தான் 
மண்ணோடு மண்ணாகப் போவதை 
மறந்து ...!
வெயில் அடித்த
சந்தோசத்தில்
தேன் கொடுக்கும் பூக்கள்
தான்
உதிர்ந்து போவதை
மறந்து ...!

மறந்து ...!

காற்றை அடைத்த 
சந்தோசத்தில் 
சிரிக்கிறது பலூன் 
தான் விழப்போவதை 
மறந்து ...!
மது அருந்திய 
சந்தோசத்தில் 
பறக்கிறது மனது 
தான் அழியப்போவதை 
மறந்து ....!

பாவியானே ...!

பாவியான என்னை 
பாவமாக மாற்றினாள்
பவி !
பரிதவித்தேன் ...

பாவி மகளே 
சாவியானதால் மீண்டும் 
பாவியானே ...!

ஹிஷாலியின் ஹைக்கூ

விரல் பிடிக்க ஆசை 
விழி பிழம்பில் 
நிலா 
வரைந்து விட்டு 
செல்கிறாள் 
வானவில்லாட்டம் ...!
உலக இசை தினம் 
கண்ணீர் அஞ்சலியில் 
கானா …!
மாராப்பிற்குள் இசை 
மயங்கி உறங்கியது 
குழந்தை ...!
கல்லை கடவுளாக்கி
கருவறையை 
கல்லாக்கிவிட்டான் ...!
விளை நிலத்தில் 
ஓர் கவிதை 
முதிர்கன்னி ...!
காலம் கடத்தியது காற்று 
தண்டனைக்குள்ளானது 
கடிகாரம் ...!
வியர்வை கலந்த மழை 
இனித்தது 
சிறுதுளி பெருவெள்ளம் 

mhishavideo - 21