ஹிஷாலியின் ஹைக்கூ

ஏற்றிய தீபம் 
இறங்கவில்லை(யே )
மனபாரம் ...!

எதற்கும் ஆசைபடாத 
சூரியன் 
ஏக்கத்தில் நிலா ...!

குரல் வளம் இல்லா
காட்டில் 
கூவும் குயில் ...!

காற்றில் நடனமாடும் 
மரங்கள் 
ரசித்தபடியே நிலா ...!

தாய் பால் 
காதல் 
புட்டிப் பால்...!

வானத்தில் கோலமிட்டன
பறவைகள் 
பசியாறியது இயற்கை 

சாலையற்ற சோலை
அணிவக்கும்
எறும்புகள் ...!

பூ ஒன்று 
புன்னகை பலவிதம் 
வாழ்க்கை தோட்ம் ...!

ஒவ்வொரு மரணத்திலும்
ஒளிந்திருக்கிறது எதோ ஒரு 
காதல் தோல்வி ...!

இரும்பிடம் 
தோற்றுப் போனது 
வறுமை ...!

5 comments:

 1. அருமையான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. பூ ஒன்று
  புன்னகை பலவிதம்
  வாழ்க்கை தோட்டத்தில் ...!

  அழகான ஹைகூ..!

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஹிஷாலி

  ReplyDelete
 5. அனைவருக்கு என் அன்பு நன்றிகள் பல

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு