ஒளி காட்டும் வழி !

பேசா தீபம்
பேசும் தீபத்தை
அணைப்பதல்ல தீபாவளி
பசிக்கும் கோயிலில்
பணத்திரியை
தூண்டுவதே தீபாவளி !
கல்லறையை சுருக்கி
கண்ணீரால் களிப்பதல்ல
தீபாவளி
கண்கள் சிரிக்க
காளையர் புசிக்க வருவதே
தீபாவளி
மழையில்லா இடி
மனமில்லா மின்னல்
மலர்வதல்ல தீபாவளி
மண்ணை பொன்னாக்கி
மனித சக்தியை ஒன்றாக்கும்
தீப ஒளியே தீபாவளி
ஓராயிரம் சுவாசங்கள்
ஒசோனை ஓட்டையாக்கி
ஒருக்குலைய வைப்பதல்ல தீபாவளி
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்று
நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி
போட்டி பொறாமையுடன்
பண்பாட்டை  பாழாக்குவதல்ல
தீபாவளி
புத்தாடை போனஸ் பலகாரத்துடன்
புண்ணிய ஆத்மாக்களை
வணங்குவதே தீபாவளி
எண்ணெய் குளியலில்
எண்ணிலடங்கா பாவங்களை
கழுவுவதல்ல தீபாவளி
எதிரியை நண்பனாக்கி
எச்சிலையை தேடும் பசிக்கு
எட்டா புகழை தேட
வழி
காட்டுவதே தீபாவளி

மதுவை குடித்து
மாவட்டம் மாவட்டமெல்லாம்
வன்முறையை வளர்ப்பதல்ல தீபாவளி
மரண வயது நூறாக்கி
மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து காட்டுவதே
சிறந்த தீபாவளி

ஒற்றை முகம்

எத்தனையோ முகங்கள்
என்னை கடந்து சென்றாலும்
உன் ஒற்றை முகம் தான்
என்னோடு ஒட்டி உறவாடத்துடிக்கிறது

அருவி இதழ் எண் - 18


கலையும் மேகம் 
கலங்கவில்லை 
வானம் 

தொலைக்காட்சி தொடர்களுக்கு 
ஓய்வு அளித்தது 
தொடர் மின்வெட்டு 

தோற்றுப் போகிறேன் 
இறுதி அலை 
எதுவென்று தெரியாமல் 

காதல் புற்று நோய் ...!

காதல் புற்று நோய்
காமம் தொற்று நோய்
கர்மம் பற்று நோய்

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து ...