பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போகிறார்கள்
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
பெண்ணிய விலங்கை
மண்ணியம்
ஆக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
அருமையான கவிதை. பெண்ணீயம் பேசும் கவிதை.பெருமை பேசும் கவிதை. வாழ்க உங்கள் கவிதை தொண்டு.
ReplyDelete//ஏன் என்றால்
ReplyDeleteபெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!//மண் என்று ஒரு வார்த்தையிலே சொன்னாலும்
ம்ண்ணுக்கு மண் வேறுபடுகிறது.
பூ வென ஒரு சொல் சொல்லிடினும்
பூவின் வாசம் மாறுகிறது.
மணம் என்று ஒரு கணம் நினைத்தாலும்
மனத்தைப் பொறுத்து அது மாறுகிறது.
கண் என்று ஒன்றினை சொன்னாலும் அது
கொண்டவர் மன வழிதான் பார்க்கிறது.
உண் என்று உறவினர் உரைத்தாலும்
உறவைப்பொறுத்தே உள் நுழைகிறது.
பெண்ணும் அதுபோலத்தான்.
பெண்ணுக்கு பெண்
எதிரியா ? தன்
உதிரத்தில் பிறந்தவளை
உயரத்தில் வைக்கிறோம்.
நம்பி வந்தவளை
நட்டாற்றில் விடுகிறோம்.
நியாயமா இது ?
பெண்ணுக்கு பெண் எதிரியா என ..
நீங்கள் கேட்கிறீர்கள்.
நியதி இது. உலகத்தின்
விதியும் இதுவே.
சுப்பு தாத்தா
.வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.
www.subbuthatha.blogspot.in
ezhilan said...
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா
sury Siva said...
ReplyDeleteதங்கள் வரவுக்கு அன்பு நன்றிகள் பல
தாங்கள் கூறுவதும் உண்மை தான் அதை நான் மறுக்கவில்லை
இருந்தும் கவி என்பது இரண்டையும் இணைக்கும் இடம் தானே என்று தான் இக்கவியை நான் எழுதினேன்
மற்றபடி ஒன்றும் இல்லை
மேலும் அதிகபடியா கருத்தக்கள் தந்து தொடர வாழ்த்துக்கிறேன்
நன்றிகள்
ஹிஷாலீ