அருவி இதழ் எண் 16...!


காற்றில்
மிதக்கும் வாசம்
கல்லறைப் பூக்கள் !

இரவு அங்காடியில்
விற்பனைக்கு இல்லை
நட்சத்திர நிலவு !

ஊரெங்கும்
ஓராயிரம் ராகங்கள்
பறவைகள் !

வான் நட்சத்திரங்கள்
பூமிக்கு வருகை
மின்மினிகள் !

கல்லுக்கு பாலாபிஷேகம்
பெண் சிசுவிற்கு
கள்ளிப்பால் !

அலையின் கனவு
கரையில்
மிதித்தபடி கால்கள் !

வருகைப்பதிவேட்டில்
நிலா
இறங்கிவந்தது வானம் !

உயிர் பெற்றது
இயற்கை ஓவியம்
ஊமை வண்ணங்கள் !

ஆகாய வானில்
ஒரு தொடர்கதை
வெண்ணிலா !

விட்டது மழை
மரக்கிளையில்
வானத்தின் கவிதை !


2 comments:

 1. ஒவ்வொரு சிந்தனை வரிகளும் பிரமாதம்... பாராட்டுக்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா ...!

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்