முற்றுப் புள்ளிகள் ....!விடுபட்ட இடத்தை 
நிரப்பி விட்டேன் 
சரியா தவறாவென 
உணரும் முன் 

எழுப்பியக் கேள்விக்கு 
எழுதுகிறேன் பதில் - அங்கே 
விடை ஒன்று வந்துவிட்டால் 
விதிக்கேது புத்தகம் 

சதியே நீயும் சரளமாக 
வளம் வருகிறாய் 
உலக ஊசியில் தைக்கும் 
உணர்வு பக்கமாய் இல்லாமல் 

கனவு அட்டையில்  
காலத்தை நகர்த்தும்  
முற்றுப் புள்ளியாய் ...!


தூதுவன்...!
ஆயிரம் கொசுக்களை 
கொன்றுவிட்டேன் பெண்ணே !
அதற்குப் பதிலாக 
அவைகளை எல்லாம் 
தூது விட்டிருந்தாலாவது 
என் காதல் 
வெற்றிப் பெற்றிருக்குமோ ...!

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...!
வானம் நீர் இறைக்க 
வரண்ட ஏரி கருணை வாக்க 
பசுமை பட்டாடையில்  
பன்னிறப் பூக்களைச் சூடி
மஞ்சள் சூரியனின் 
மஞ்சத்தில் எழுந்தவள் 

பறவைக்கும் வண்டுக்கும்  
பாலுட்டி  தாலாட்டி 
காயும் கனியும் 
கரும்பும் அணிந்த இன்பக்காட்சி 
தருங் காலம் பொங்கல் காலம் 
தலை நாள் போகி 

போகியை அடுத்தது 
பொங்கல் புது நாள் 
அந்நாளில் பழையன  கழிதலும் 
புதியன புகுதலும் நிகழும் 

வீட்டிலுள்ள பழம் பானைகள் 
விடைபெறும் 
புதுப் பானைகளில் 
பொங்கல் நடைபெறும் 

பால் பொங்கும் பொழுது 
பொங்கலோ பொங்கல் என 
மங்கல ஒலி எங்கும் கிளம்ப 

பெண்கள் குரவையிட   
பூவும் புகையும் 
பொங்கலும் கொண்டு 
இல்லுறை தெய்வத்தை வணங்கி 
வயிறார உண்டு மகிழும் 
தமிழர் அனைவர்க்கும் 
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...! 

காதல் பிறக்கப்படுகிறது ...!விரும்பிய போது கேள்வியானாய் 
விலகிய போது விடையானாய் 
அர்த்தம் மட்டும் சொல்லாமலே 
அமைதியாய் பிரிந்த  என் இதயம் 
மறு நொடியில் ஜெனித்தது 
மறந்தால் மரணம் 
நினைத்தால் ஜெனனம் 
நிம்மதியை மட்டும் நல் மதியாய் 
கேட்கிறேன் கடவுளே 
காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது ...!

முள்ளில் ரோஜா - # 17


எத்தனையோ அழகிகள் 

என் முன்னே வந்தாலும் 

ஒற்றை இதழ் ஊனத்திலும் 

உன்னை வெல்கிறேன் 

இதனால் தான் என்னவோ 

இறைவன் எனக்கு ஆயுளை

அளந்து வைத்தாரோ ...!முள்ளில் ரோஜா - # 16
ரத்தம் ஒன்று 

யுத்தம் இரண்டு 

நித்தம் நித்தம் 

சத்தமில்லாமல் துடிக்கிறேன் 

அர்த்தமில்லா கிளைகளில் 

ஆயிரம் மலர்களாக ....!முள்ளில் ரோஜா - # 15


தாயான முள் தனித்திருக்க 

தளதளவென பூத்திருக்க 

பலதரப்பட்ட கண்களில் தப்பியவள் 

கசங்கிவிட்டேன் 

காலிப் பசங்களின் காமவெறிக்கு ...!

ஆவி கதை ...!


ஜெனனம் மரணம் இவற்றின் ஏறுவரிசை தான் குழந்தை என்று நம்பிய எங்களுக்கு குழந்தை காணாமல் போனது பெரும் பாதிப்பை தந்தது அழுதோம் புலம்பினோம் இறைவனிடம் முறையிட்டோம் இருந்தும் குழந்தை கிடைக்காததால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் சார் நீங்கள் தான் எங்கள் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்கள் போலீஸும் தேடினார்கள் குழந்தை கிடைக்கவில்லை 

இரண்டு நாட்கள் சென்றது தீடிரென்று ஓர் நாள் போன் வந்தது உங்கள் குழந்தை வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு கோடி தரவேண்டும் என்று இதை போலீஸில் சொன்னால் உங்கள் குழந்தையை கொன்றுவிடுவோம் என்றனர் அவர்களும் ஒகே நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் உனக்கு தேவையான பணத்தை எங்கு கொண்டு வருவது என்று கூறு என்றனர் உடனே அவர்கள் அதை நாளை சொல்கிறோம் என்று போனை வைத்துவிட்டார்கள் 

மறுநாள் காலையில் போன் வந்தது ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் இடத்தில் பணப் பெட்டியை வைத்துவிட்டு சென்று விடுங்கள் உங்கள் வீட்டில் குழந்தை இருக்கும் என்று போனை வைத்துவிட்டார்கள்.

அந்தப் பெற்றோர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கையில் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது 

நிறை மாதம் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் ஒரே மலை இடி மின்னல் இவர்கள் சென்ற கார் பழுதடைந்தது என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கையில் அருகில் இருந்த பூக்கடையில் உள்ள வயதானப் பாட்டியை உதவிக்கு அழைத்துப் பிரசவம் பார்க்கும்படி கேட்டார்கள் 

அவரும் தாயையும் சேயையும் காப்பாற்றினாள் இதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ என்று வினவினர் அதற்கு அந்த வயதானவள் எனக்கு ஒன்றும் செய்யவேண்டாம் எனது கூடத்தில் ஐந்து அநாதைக் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் உதவினால் போதும் அத்துடன் என் விதியும் நாளையுடன் முடிகிறது இதோ என் விலாசம் என்று கூற 

அவர்கள் வாங்க்கிக் கொண்டு கலையில் வந்து உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறிச் சென்றனர் மறுநாள் காலையில் அந்த மூதாட்டி இறந்துவிட்டார் இவர்கள் பணத்தை கொடுக்காமல் திரும்பியது நினைவுக்கு வந்தது உடனே அங்குள்ள சுடுகாட்றிற்கு போனார்கள் அங்கு அந்த முதியவள் அடக்கம் செய்த இடத்தில் நின்று அழுதார்கள் அச்சமயம் அந்த ஆவி பேச ஆரமித்தது 

நான் நீங்கள் பணம் கொடுப்பீர்கள் என்று நம்பி எனது வீட்டிற்கு சென்றேன் ஆனால் நான் இறந்தது தெரிந்து நீங்கள் பணத்தைக் கொடுக்காமல் திரும்பியதால் மனம் வருந்தி எனது ஆத்துமா சாந்தியடையாமல் உங்கள் பின் தொடர்ந்தது வழியில் கோயில் இருந்ததால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை உடனே நான் இறவன் காலடியில் மண்டியிட்டேன் அப்போது இறவன் எனக்கு ஓரிரு நாள் மட்டும் வாழ அனுமதித்து உன் உயிர் எந்த உருவில் வாழவேண்டும் என்று சொல் என்றார் உடனே நான் மனித ஜென்மத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் பூவாக வாழ விரும்புகிறேன் என்றேன் இறைவன் அப்படியே ஆகட்டும் என்றார் அதே போல் நானும் வழக்கம் போல் பூவாங்கு கடைக்கு சென்று தனது பூக்களையெல்லாம் உதவிக்கு அழைத்து உங்கள் குழந்தையை சுடுகாட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் இப்போது கூறுங்கள் ஏமாற்றுவது எவ்வளவு பாவம் என்று இதை நான் ஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றால் என்னிடம் இருக்கும் குழந்தைகளும் உங்களைப் போல் யாரோ ஒருவரின் ஏமாற்றத்தால் பிறந்தவர்கள் தான் இப்போது அம்மா அப்பா இல்லாமல் அநாதை என்ற பெயரில் வாழ்கிறார்கள் எவ்வளவு கொடியது என்று இப்போது உணர்ந்திருப்பேர்கள் என்று நம்புகிறேன் என்றது அந்த ஆவி 

அவர்களும் தங்கள் தவறை உணர்ந்து அக்குடிசையில் வாழ்ந்த அநாதைக் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒரு நல்ல எதிற்காலத்தை உருவாக்கும் படி வாக்குறுதி அளித்தார்கள் அந்த முதியவளின் ஆத்துமாவும் சாந்தியடைந்தது .


நன்றி வணக்கம் !


புத்தாண்டு சபதம் ...!ஆழக்கடலில் நஞ்சுண்டு அங்கே
ஆயுது  பார் மீன் நண்டு  அதுலே
வலையை விரித்தான் கஞ்சிக்கு அவன்
வாழ்க்கை பயணமோ அஞ்சு பத்துக்கும்

கற்பை காத்தால் கண்ணகி அங்கே
கரையை மிதிக்கும் காதலர்களே
உப்பை தின்று வாழ்ந்தாலும் தமிழ்
கற்பை காப்போம் என மாறுங்கள் !

எத்திசையிலும் தமிழ் முழங்க நாம்
ஏணி போட்டு வாழ்ந்தாலும் இங்கே
காணி நிலம் கெட்டு விட்டால் நம்
கண்ணீர் கூட விஷமாகுமே !

மதுவை தின்று மாதுவைக் கொன்ற கரைகள்
மண்ணோடு மண்ணாக மறைந்தாலும்
இனி ஒரு மானுடம் இழிவை மறந்து
இதயம் துறந்து சபதம் எடுப்போம் வாருங்கள்

சாத்தான் புத்திக்கு சாட்டையடி தந்து
தமிழ் வளம் காத்த மண்ணில்
தலை நிமிர்ந்து சொல்லடா நாளை
நாளிதழில் நல்லனவை மற்றும் வருமடா
என்று மாறுவோம் மரணத்தை துறப்போம்
என்று இந்த இனிய புத்தாண்டு நல்நாளில் ...!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - 2013வண்டுக்கு தாய் மலருமில்லை 

வானுக்கு தாய் மண்ணுமில்லை 

யாருக்கு யார் தாய் என்று 
அறிந்ததில்லை இவ்வுலகில் 

யாவரும் ஓருயிர் தாம் என்று உணர்த்திட 

வாழ்வோம் பல்லாண்டு ...!


(என்னை வழிநடத்திய அனைத்து உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் )

mhishavideo - 21