கயல் விழி கண்ணனாய் ...!


யாழ் விழியால் பேசும் பூவிழியே
உன் போர் விழியால் இசைக்கும்
காதல் ஓசைகள்

என் செவிவழி வாங்கிய
நொடியில்
நாள் வழி தோறும்
ஓர் வழி பாதையில்
கால் வலியால்
நின்று காத்திருக்கிறேன்

என் மைவிழிப் பார்வையில்
உன் பொய் விழி கனவுகள்
சங்கமிக்கும் கனவுவழி கோட்டையில்

மெய் சேர்க்கும் வாழ்க்கை
வழியை தேர்ந்தெடுப்போம்
கயல் விழி கண்ணனாய் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)