காமம் தனித்து ....!


மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.

இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.

முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.

அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.

உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.

தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)